வணக்கம்!
இன்றைய காலத்தில் அவசர யுகம் என்று சொல்லிக்கொண்டு பலர் தான் செய்யவேண்டிய கடமையை கூட செய்வதில்லை. மரணம் முடிந்தபிறகு அவர்களுக்கு 16 ஆவது நாள் என்ற ஒன்று செய்வார்கள் பலர் இதனை முன்கூட்டியே இதனை செய்துவிடுகின்றனர். நாள்கள் இல்லை வேலை இருக்கின்றது என்று இதனை தவிர்கின்றனர்.
ஒருவருக்கு பிறந்த 16 ஆவது நாள் மிக முக்கியம் அதுபோல இறந்த 16 ஆவது நாள் மிக முக்கியம் என்பதால் 16 நாள்களில் செய்யவேண்டிய காரியத்தை அந்த நாளில் செய்யவேண்டும். நாட்களை குறைத்துக்கொண்டு இதனை செய்யகூடாது.
பிறந்த குழந்தைக்கு 16 ஆவது நாள் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். 16 ஆவது நாளில் பிறந்த குழந்தைக்கு என்று தனிப்பட்ட பூஜை செய்வார்கள். 16 நாட்களுக்கு பிறகு தான் கோவில்களுக்கு சென்று வரவேண்டும். 16 நாட்கள் தீட்டு என்று சொல்லுவார்கள்.
ஒருவர் இறந்த பிறகு 16 ஆவது நாள் வரை எந்த கோவிலுக்கும் செல்லகூடாது. இறந்த பிறகு 16 நாட்களுக்கு பிறகு தான் கோவிலுக்கு செல்வார்கள். 16 நாட்கள் தீட்டு என்ற கணக்கில் வரும் பல ஊர்களில் இது தான் நடைமுறை ஒரு சில ஊர்களில் இது மாறலாம் ஆனால் 16 நாட்கள் வரை மட்டும் இதனை கடைபிடிக்கலாம்.
16 நாட்கள் என்ற கணக்கை நீங்கள் வைத்திருந்தால் போதுமானது. பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும் 16 நாட்கள் முக்கியமானது. ஒரு சில ஊர்களில் மாற்றப்பட்டாலும் நீங்கள் இதனை பின்பற்றி வாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment