Followers

Tuesday, June 18, 2019

இராகு தசா சூரிய புத்தி


வணக்கம்!
          இராகு தசா சூரியன் புத்தியை பற்றி சொல்லுங்கள் என்று நண்பர் ஒருவர் கேள்வி ஒன்றை அனுப்பியிருந்தார். இதனைப்பற்றி பழைய பதிவில் சொல்லிருப்பேன் என்று நினைக்கிறேன் இருந்தாலும் புதிய தகவலாகவும் சொல்லுகிறேன்.

இராகு எப்படி ஜாதகத்தில் அமர்ந்திருக்கின்றது என்பதை பொறுத்து தான் பலனை கணிக்கமுடியும். ஒரளவு ஜாதகத்தில் நல்ல முறையில் அமைந்திருந்தால் ஜாதகருக்கு பெரியளவில் நன்மையை தான் செய்துக்கொண்டு இருக்கும்.

இராகு பெரும்பாலும் நிறைய பணத்தை கொடுத்தால் அந்த ஜாதகர்க்கு சூரியன் புத்தியில் தன்னுடைய தந்தையை இழக்க நேரிடும். இளம்வயதாக இருந்தால் பெரும்பாலும் தந்தைக்கு மரணத்தை கொடுத்துவிடுகின்றது. இளம் வயதில் அதிக வீரியமாக தசா வேலை செய்யும்.

சூரியன் ஒரளவு நன்றாக அமர்ந்தால் நோய் மற்றும் மனக்கவலையோடு இது இருக்கும். சூரியன் மறைவுஸ்தானம் அல்லது தீயகிரகங்களின் வீட்டில் அமர்ந்தால் இதனை பார்த்து பயப்படவேண்டும்.

சூரியன் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்துவிடகூடாது. ஒன்பதில் அமர்ந்த சூரியன் தன்னுடைய புத்தியில் தந்தைக்கு மரணத்தை கொடுக்கும். இராகு தசாவில் இது உறுதியாக மரணத்தை கொடுக்கும் என்று சொல்லலாம்.

இராகுதசா சூரிய புத்தியில் நல்லதைவிட கெடுதல் அதிகமாகவே கொடுக்கின்றது. இராகு ஒரு மாதிரியான கிரகம் சூருியன் ஒரு விதமான கிரகம் இரண்டும் சம்பந்தப்படும்பொழுது அது கெடுதலை அதிகமாகவே கொடுகின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: