Followers

Wednesday, June 12, 2019

பீடை விலக என்ன செய்யலாம்?


வணக்கம்!
          நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் பலிக்கும் என்ற நிலை வரும்பொழுது மட்டுமே நமது ஆத்மா மிகுந்த சுத்தமாக இருக்கின்றது என்று அர்த்தம் கொள்ளவேண்டும். வேண்டுதல்கள் நியாமாகவே இருக்கவேண்டும் அதனை வேண்டி கிடைத்துவிட்டால் உங்களின் ஆத்மா மிக மிக நல்ல நிலையில் இருக்கின்றது.

நாம் சாமியை தேடிச்சென்றாலும் சாமியாரை தேடிச்சென்றாலும் நடக்கின்றது என்பது நம்முடைய ஆத்மா இருக்கும் நிலையை பொறுத்து தான் நடக்கும். விரைவாக நடக்கின்றதா அல்லது மெதுவாக நடக்கின்றதா என்பதை பொறுத்து அமையும்.

பீடையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று நான் சொன்னது கூட உங்களின் ஆத்மா நல்ல நிலையில் இருப்பதற்க்குள்ள வழியை தான் சொல்லிருக்கிறேன். பீடை அதிகமாக அதிகமாக அது ஆத்மாவிற்க்குள்ளும் பிடித்துக்கொண்டு உங்களை போட்டு துவம்சம் செய்துவிடுகின்றது.

ஒன்றில் இருந்து நாம விலக விலக நாம் மேலே உயர்ந்துக்கொண்டே செல்லலாம். நம்மை பிடித்த பீடை விலகினாலே போதும் என்று சொல்வது உண்டு. நம்முடைய வீட்டில் உள்ள பீடையையும் நாம் விலக்கவேண்டும் அதற்கு வீட்டில் நீங்கள் ஏற்றும் தீபமே மிகச்சிறந்த ஒன்று.

ஒரு வீட்டில் அதிகமாக பீடை இருக்கின்றது எந்த ஒரு நல்லதும் நடக்கவில்லை வருகின்ற பணம் கையில் தங்குவதில்லை இதற்கு நாம் என்ன செய்யலாம் என்றால் வீட்டில் குத்துவிளக்கை ஏற்றி வைத்து வழிபட்டு வந்தால் இந்த பீடை விலகிவிடும்.

சிறப்பு பெளர்ணமி பூஜை நடைபெற இருக்கின்றது.  பெளர்ணமி பூஜையில் கலந்துக்கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: