Followers

Sunday, August 11, 2019

லக்கனாதிபதியும் தொழிலாளியும்


ணக்கம்!
          பெரும்பாலான தொழிலாளர்களுக்கு அவர்களின் லக்கனம் அடிவாங்கியதால் தான் அவர்கள் தொழிலாளிகளாக இருக்கின்றனர். லக்கானதிபதியாக எவர் வந்தாலும் அவர் மறைமுகவீடுகள் அல்லது பலம் இழந்து சென்றால் அவர்கள் அடிமைதொழில் செய்யவேண்டியதாகியுள்ளது.

நீங்கள் பத்து லட்சம் சம்பளம் வாங்கியவர்களாக இருந்தாலும் நீங்கள் ஒருவருக்கு கீழ் வேலை பார்த்தால் நீங்களும் அடிமைதொழிலாளியாகவே கருத்தப்படுவீர்கள். உங்களுக்கும் லக்கினாதிபதி  சரியாக இருக்காது. 

ஒருவருக்கு கீழ் ஒருவர் வேலை செய்கின்றார் என்றால் அவருக்கு லக்கனாதிபதி சரியில்லை என்பதாவே எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் சொல்லுவதை பார்த்தால் உலகில் உள்ள முக்கால்வாசி பேருக்கு லக்கனாதிபதி சரியில்லை என்பது போலவே இருக்கின்றது என்று கேட்கலாம்.

உலகில் வேலை செய்யும் அனைவருக்கும் லக்கனாதிபதி சரியில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம். முதலாளி என்பது வேறு தொழிலாளி என்பது வேறு. லக்கனாதிபதி நன்றாக இருந்தால் நீங்கள் இராஜாவாக இருக்கலாம். லக்கனாதிபதி சரியில்லாத காரணத்தால் தான் நீங்கள் தொழிலாளியாக இருக்கின்றீர்கள்.

லக்கனாதிபதி எந்தளவுக்கு இருக்கின்றது என்பதை பாெறுத்து நீங்கள் வேலை செய்யும் இடம் மாறுபடும். மிக மோசமாக அடிமைப்படும்பொழுது மிக கீழ்தரமான அடிமை தொழிலில் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஒவ்வொரு லெவலுக்கும் தகுந்தமாதிரி உங்களின் வேலை இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: