Followers

Tuesday, August 13, 2019

பாதகாதிபதி


வணக்கம்!
          இலவச சோதிட ஆலாேசனை சிறப்பாக சென்றுக்கொண்டு இருக்கின்றது. அனைவரும் இதில் தங்களின் ஜாதகத்தை அனுப்பி இலவச ஆலாேசனை பெற்றுக்கொள்ளலாம். இலவச சோதிட ஆலோசனைக்கு தங்களை இழுத்து பரிகாரம் செய்துக்கொள்வதற்க்கு வழி தேடுவார் என்று சிலர் நினைப்பது தெரிகிறது. நீங்களே எளிமையாக செய்யும் பரிகாரம் போலவே இது இருக்கும் பயப்படாமல் அனைவரும் அனுப்பி வைக்கலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் பாதகாதிபதி தசா நடந்தால் அவரால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பிரச்சினை தருமா என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டு அனுப்பியிருந்தார். பாதகாதிபதி தசா நடக்கும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து இதற்க்கு பலனை சொல்லவேண்டும்.

ஒருவரின் குடும்பத்தில் உள்ளவர்களில் தலைவர்க்கு பாதகாதிபதி தசா நடக்ககூடாது. பாதகாதிபதி தசா நடந்தால் அவரக்கு பிரச்சினை வரும்பொழுது ஒட்டு மொத்த குடும்பமும் பிரச்சினையில் தவிக்கும். வீட்டின் தலைவர் என்பதால் மொத்தகுடும்பத்திற்க்கும் பிரச்சினை என்று எடுத்துக்கொள்ளலாம்.

குடும்பத்தின் தலைவர் அல்லாமல் வேறு நபராக இருந்தால் அந்த பாதிப்பு அந்தளவுக்கு இருக்காது. சம்பந்தப்பட்ட நபர்க்கு பிரச்சினை என்பதால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அது பதம் பார்க்காது. தலைவர்க்கு பாதகாதிபதி தசா நடந்தால் அவர் பொறுப்புகளை வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு பிரித்துக்கொடுத்துவிடவேண்டும்.

தன்னுடைய பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்துவிட்டால் அவருக்கும் பெரியதாக பாதிப்பு என்பது வரப்போவதில்லை. வீட்டில் உள்ளவர்களின் நிலைமையும் ஒரளவுக்கு கட்டுக்குள் நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: