வணக்கம்!
நம்ம ஆட்கள் நிறைய பேர் போட்டு குழப்பிக்கொள்கின்றனர். ஜாதகத்தை ஒரளவு எடுத்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் செயல்பட்டால் நல்லது அதனை விட்டுவிட்டு அப்படியே பிடித்துக்கொள்கின்றனர்.
சோதிடத்தை படித்துவிட்டு பலர் அந்த நட்சத்திரத்திற்க்கு தகுந்தார்பாேல் சாப்பாடு கூட சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றனர் என்று கேள்விப்பட்டேன். தினமும் இந்த சாப்பாட்டை சாப்பிடவேண்டும் என்று பட்டியல் போட்டுக்கொண்டு சாப்பிடுவது என்று சாப்பிடுவதாக கேள்விபட்டேன்.
தன்னை ஒழுங்குப்படுத்திக்கொள்ளவேண்டும் அதற்காக இப்படி எல்லாம் சாப்பிட்டால் உங்களின் உடல்நலம் கெட்டுவிடும் அதோடு ஜாதகத்தை அந்தளவுக்கு நாம் பயன்படுத்த வேண்டியதில்லை. கொஞ்சமாக ஜாதகத்தை எடுத்துக்கொள்ளலாம்.
தினமும் நான் இதன்படி தான் வாழ்வேன் என்றால் உங்களின் வாழ்க்கை வீணாக தான் செல்லும். நானே இருக்கின்றேன் என்று வைத்துக்கொள்வோம். தினமும் கோவிலுக்கு செல்லவேண்டும் என்று நினைத்தால் மாதத்தில் பாதிநாட்கள் கூட செல்லமுடியாது.
நமது நடைமுறை வாழ்க்கைக்கு எது ஏற்றக்கொள்ள முடியுமே அது போல உங்களின் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளவேண்டும். சோதிடத்தின் பின்னாடி செல்லலாம் ஆனால் அது பின்னாடி தினமும் செல்லகூடாது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment