வணக்கம்!
ஒருவருக்கு நல்லகிரகத்தின் பலன் வரும்பொழுது அந்த நபரக்கு செல்வம் வேண்டுமானால் வரலாம் ஆனால் அவர்க்கு இந்த உலகத்தின் படிப்பை காட்டிக்கொடுப்பதில்லை. உலகத்தின் நியதி இப்படி தான் இருக்கும் என்று காட்டிக்கொடுக்காது.
ஒருவருக்கு கெடுதல் தரும் காலக்கட்டங்களில் மட்டுமே சிறந்த படிப்பினை தரும். உலகத்தைப்பற்றி அறிந்துக்கொள்ளும் வாய்ப்பு அவர்க்கு கிடைக்கும். உலகத்தைப்பற்றி தெரிந்துக்கொள்வதை விட அவரைப்பற்றியாவது அவரின் உறவினர் மற்றும் நண்பர்களை பற்றியாவது தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
ஒருவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் இவர்களை கூட தெரிய வாய்ப்பை தீயகிரகங்கள் தான் உருவாக்கி கொடுக்கின்றது. கெட்டகாலத்தில் தான் இந்த உலகத்தின் உண்மை முகத்தை அவர்களால் பார்க்கமுடியும்.
கெட்டகாலத்தில் ஒன்றை மட்டும் தவிர்த்து இருக்கலாம் அதாவது நமக்கு வரும் நோய் மட்டும் தவிர்க்கலாம். உடலை சுத்தப்படுத்த நோய் வந்தாலும் அதனை எதிர்க்கொள்வதற்க்கு கொஞ்சம் கடினமாக இருக்கும் என்பதால் இதனை தவிர்த்து இறைவன் கொடுத்து இருக்கலாம் என்று தோன்றுகின்றது.
என்னையே நான் ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு தான் சொல்லுகிறேன். எனக்கு கெடுதல் காலக்கட்டத்தில் நிறைய விசயங்களை தெரிந்துக்கொள்ள முடிந்தது. நல்ல காலக்கட்டத்தில் பெரியதாக ஒன்றும் கற்றுக்கொள்ளமுடியவில்லை.
கெடுதல் காலம் வந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு உங்களை சுற்றி என்ன நடக்கின்றது என்று தெரிந்துக்கொண்டு உங்களின் ஞானத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment