வணக்கம்!
அம்மன் கோவில் வேலை ஆரம்பிக்கும் தேதியை ஒரு சில தினத்தில் உங்களிடம் தெரிவிக்கிறேன். பலர் இதனைப்பற்றி ஆவலாக கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். என்ன இன்னமும் இதனைப்பற்றி தெரிவிக்கவில்லை என்று கேட்டனர். ஒரு சில தினங்களில் உங்களுக்கு அந்த நாளை தெரிவிக்கிறேன்.
அம்மன் கோவில் கட்டும் பணி ஆரம்பிக்கும்பொழுது நிறைய பணம் தேவைப்படுகின்றது முடிந்தவரை அதனை அனுப்பி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே நான் பணம் அனுப்பிவிட்டேன் என்று இருக்காமல் மறுபடியும் அனுப்பிவையுங்கள்.
அம்மன் காேவில் கட்டுவதற்க்கு ஆரம்பிக்கும்பொழுது இருந்தே அது நிறைய தடங்கள் வந்துக்கொண்டு தான் இருந்தது. தற்சமயம் முதல் நிறைய போராட்டங்களுக்கு பிறகு தான் அது நிறைவேறும் என்று தோன்றுகின்றது.
அனைத்திற்க்கும் காரணமாக இருப்பது எது என்றால் நம்முடைய கர்மா இதில் முழுவதும் இருக்கின்றது. கர்மாவை போக்க இது நன்றாக உதவுகின்றது என்று தான் சொல்லவேண்டும். நான் சாதாரணமாக ஒருவரிடம் பணம் கேட்டால் உடனே கிடைத்துவிடும் கோவில் என்றால் அது அவ்வளவு எளிதில் கொடுக்கமுடியாது. இதிலேயே தெரிந்துவிடுகின்றது கோவில் கட்டுவது என்றால் எந்தளவுக்கு புனிதமான காரியம் என்பது புரிகின்றது.
உங்களால் முடிந்தவரை இதற்கு நன்றாக முயற்சித்து இதில் அக்கறை காட்டி வேலை செய்யுங்கள். உங்களின் கர்மா கண்டிப்பாக இதில் போகும் என்று நான் உறுதியாக உங்களுக்கு தெரிவிக்கிறேன். ஒரு சில தினங்களில் கோவில் கட்டும் பணி ஆரம்பிப்பது எப்பொழுது என்பதை தெரிவித்துவிடுகிறேன்.
இலவச சோதிட ஆலோசனை கேட்டு அனுப்பியவர்களில் பாதி பேர்க்கு இன்னமும் ஆலோசனை வழங்கவில்லை விரைவில் உங்களை கூப்பிடுகிறேன். இலவச சேவையில் ஜாதகம் பார்க்க அனுப்ப இன்றே கடைசி தேதி. பலன் சொல்லுவதற்க்கு இந்த வாரத்தில் அனைத்தும் முடிந்துவிடுகிறேன்.
தொடர்புக்கு : 9551155800, 8940773309 What'sApp Number: 9551155800
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment