Followers

Sunday, November 4, 2012

ஆன்மீக அனுபவங்கள் 15



வணக்கம் நண்பர்களே என்னுடைய பதிவுகளை படித்து விட்டு எனக்கு போன் மூலம் இன்னும் நிறைய எழுதுங்கள் என்று அனைத்து நண்பர்களும் பாராட்டுகிறார்கள் அனைவருக்கும் நன்றி.

பல நண்பர்கள் இந்த தொடரை படித்துவிட்டு நாங்கள் முயற்சி செய்து எப்படியாவது இதை பெற்றுவிடுகிறோம். அப்படி குரு கிடைக்காத பட்சத்தில் நாங்களாவே எடுக்கமுடியுமா என்று கேட்டார்கள். அவர்களுக்கு சொல்லிக்கொள்ளுவது மனிதனால் முடியுதா காரியம் எதுவும் இல்லை என்று தான் சொல்லவேண்டும். கண்டிப்பாக எடுக்க முடியும். உங்களுக்கு தேவை கடுமையான பயிற்சி தான். பயிற்சி என்றவுடன் நீங்கள் உடலை வருத்த வேண்டும் என்று நினைக்க வேண்டாம். மனதை வருத்தினால் அனைவராலும் எடுக்கமுடியும்.இந்த உடலை வைத்து தான் அனைத்தையும் நீங்கள் பெறமுடியும்.

ஒரு ஆசிரமத்தின் தலைவராக பொறுப்பேற்றவர் ஒரு கோவிலில் பூசாரியாக வேலை செய்துக்கொண்டு இருந்தார் அப்பொழுது அந்த கோவிலுக்கு வரும் ஒரு பெண் இவருக்கு காதல் கடிதம் கொடுத்தார் உடனே அதனை வாங்கிய பூசாரி அந்த கடிதத்தை அப்பொழுது அந்த ஆசிரமத்தின் தலைவராக இருப்பவரிடம் கொடு்த்து நான் எப்படி இதனை சமாளிப்பது என்று கேட்டார் அதற்கு அந்த தலைவர் உன்னுடைய உடம்பு தான் அவளுக்கு காதல் செய்ய தூண்டியது உன் உடம்பை வருத்து அப்பொழுது அனைத்தும் மாறும் என்று அறிவுரை சொல்லி அனுப்பினார். 

அவர் அப்பொழுதுதே அதை செய்திருந்தால் இந்த நாடு அவரை பார்த்து சிரித்து இருக்காது உடம்பை வளர்த்தார். அவர் நேரம் அந்த ஆசிரமத்திற்க்கு தலைவர் ஆனார். அந்த ஆசிரமத்தின் பேரை முடிந்தளவுக்கு கெடுத்து இன்று அந்த ஆசிரமம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.

இதை ஏன் உங்களுக்கு சொல்லுகிறேன் என்றால் நமது உடம்பை அதற்கு தகுந்தார் போல் மாற்றிக்கொண்டு நீங்கள் இந்த பயிற்சியை செய்யவேண்டும் நாம் எல்லாம் சந்சியாசியாக மாறபோவதில்லை. இல்லறத்தில் இருந்துக்கொண்டு தான் ஆன்மீகவாழ்க்கை வாழ போகிறோம் இந்த பயிற்சி செய்யும் நேரத்தில் மட்டும் உடம்பை கட்டுபாடுடன் செய்தால் கை மேல் பலன்.

உடலை வருத்து என்றவுடன் நீங்கள் நினைத்திருக்கலாம் உடலை பட்டினி போடமுடியாது இது ஒத்துவராது. உடலை வருத்து என்பதை நீங்கள் இப்படி எடுத்துக்கொள்ளலாம். எப்படி என்றால் உங்கள் அறையில் தனியாக அமர வேண்டும் தரையில் காலை மடக்கி உட்கார வேண்டும் காலை மடக்கி சமனம் போட்டு அமருவது இப்பொழுது உள்ள மனிதருக்கு கடினமாக இருக்கிறது, சிறிது நேரம் அவ்வாறு உட்காரும் போது கால் மரத்துவிடுகிறது இரத்த ஓட்டம் செல்லாமல் மரத்துவிடுகிறது அதனால் நீங்கள் உட்காருவதற்க்கு பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். 

இப்பொழுது உள்ள மனிதர்கள் தனிமையில் இருப்பது கிடையாது. ஒருவர் தனிமையில் இருந்தால் உடனே தன்னுடைய செல்போனை எடுத்து அதில் பாட்டு கேட்பது அல்லது கேம் விளையாடுவது அப்படி இல்லை என்றால் யாரிடமாவது மொக்கை போடுவது இது தான் இன்று இவர்கள் செய்வது. 

பாட்டு கேளுங்கள் ஒன்றும் தவறு இல்லை ஆனால் சில நேரமாவது தனிமையில் அமர வேண்டும் அப்பொழுது மட்டுமே உங்களால் உங்களுக்குள் நடப்பது என்ன என்று உங்களுக்கு தெரியவரும். தனிமையில் இருக்கும் போது செல்போனை பயன்படுத்த வேண்டாம். இந்த மாதிரி எல்லாம் எந்த ஆசிரமத்திலும் சொல்லிக்கொடுக்க மாட்டார்கள். இதை எல்லாம் இங்கு படித்தால் தான் உண்டு.

தனிமையில் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார் அதனால் நான் தனிமையில் இருக்கிறேன் என்று வீட்டில் உங்கள் துணைவர் இருக்கும் போது தனிமையில் போய் இருக்காதீர்கள். தனிமை உங்களுக்கு இயற்கை இயற்கையாகவே அமைத்து கொடுக்கும் அப்பொழுது இதனை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: