Followers

Wednesday, November 21, 2012

பூர்வ புண்ணியம்



வணக்கம் நண்பர்களே !
                                   இரு தினங்கள் முன்பு என்னிடம் ஒரு நண்பர் பேசினார். அப்பொழுது அவர் நான் மிகப்பெரிய சோதிடபரம்பரையில் இருந்து வந்தவன் நான் ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்து இன்று அந்த வேலை பிடிக்காமல் அதை விட்டுவிட்டேன். இப்பொழுது சோதிடத்தின் மீது எனக்கு அளவுகடந்த விருப்பம் வந்துவிட்டது என்றும் சொன்னார்.

நண்பர் பேசிக்கொண்டு இருக்கும் போது நான் பல புத்தகங்கள் படித்து இருக்கிறேன் ஆனால் பூர்வ புண்ணியத்தைப்பற்றி யாரும் அந்தளவு எழுதவில்லை ஒரளவுக்கு தான் எழுதியுள்ளார்கள் என்றும் சொல்லிருந்தார். அப்பொழுதே நான் அவரிடம் நான் அடுத்து அதனைப்பற்றி தான் எழுத உள்ளேன் என்று சொல்லிருந்தேன். அவரும் நீங்கள் எழுதுங்கள் என்றும் சொன்னார்.

எனது ஆஸ்திரிலியா நண்பர் ஒருவரும் கேட்டு இருந்தார் எப்படி பூர்வபுண்ணியத்தைப்பற்றி சொல்லுகிறீர்கள் அதனை எப்படி பார்ப்பது என்றும் கேட்டு இருந்தார் அவரின் விருப்பத்தையும் அவர்கள் மூலம் உங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றலாம் என்று பூர்வபுண்ணியத்தைப்பற்றி எழுத உள்ளேன்.

பூர்வபுண்ணியத்தை நான் பார்க்கும் போது அந்த வீட்டை பார்த்தவுடனே என் மூளையில் தானாகவே தோன்றிவிடும். அதனை வைத்து நான் பலன் பார்க்கிறவர்களுக்கு சொல்லிவிடுவேன். பொதுவாக முன்பிறவியி்ல் அப்படி இருந்தீர்கள் இப்படி இருந்தீர்கள் என்று சொல்லமாட்டேன்.

பூர்வபுண்ணியத்தைப் பார்த்து இப்பொழுது இந்த மாதிரி பிரச்சினை வரும் என்று சொல்லிவிட்டு பூர்வபுண்ணியத்திற்க்கு தகுந்தமாதிரி பரிகாரத்தை செய்ய சொல்லுவேன் என்னுடைய பரிகாரங்களே பூர்வபுண்ணியத்தில் ஏற்பட்ட பாவத்திற்க்கு வடிகாலாக தான் இருக்கும். அப்பொழுது அவர்களுக்கு பிரச்சினைகள் குறையும்.

பொதுவாக நேரடி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும் ஏன் என்றால் இந்த பூர்வபுண்ணியத்தை பற்றி பார்க்கும் போது அந்த நபர் நமக்கு எதிராக அமரும் போது சரியாக வரும்  என்பதால் நேரடி வாடிக்கையாளருக்கு இது சாத்தியப்படும். தொலைபேசியில் பேசும் போதும் சொல்லலாம் ஆனால் அது கொஞ்சம் கடினமாக இருக்கிறது.

பூர்வபுண்ணியத்தை பொருத்தவரை ஐந்தாம் வீட்டை வைத்து தான் பார்க்கிறோம் அப்படி பார்க்கும் போது நான் நினைப்பது சரி தானா என்று நினைப்பேன் அப்பொழுது எனது குருநாதர் அல்லது என்னுடைய இஷ்டதெய்வம் அல்லது குலதெய்வம் அதற்கு உறுதிகொடுக்கும் நீ நினைத்தது சரிதான் என்று சொல்லும் அதை நான் சொல்லும் போது 100 சதவீதம் உண்மையாக இருக்கும். 

இதனைப்பற்றி நான் வெளியில் சொல்லுவதில்லை. எனக்கு தெரியும் அவர்களுக்கு நான் கொடுக்கும் பரிகாரம் சரியாக இருக்கும். நீங்கள் அனைவரும் சோதிடத்தின் மீது அதிகமான விருப்பத்துடன் படிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். பொதுவாக சோதிடத்தில் பலனை சொல்லி அதனை அடுத்தவருக்கு நடக்கும்போது மட்டுமே நமக்கு தெரியவரும் நாம் எந்தளவுக்கு போய்கொண்டு இருக்கிறோம் என்று தெரியும்.

சோதிடத்தை தொழிலாக செய்யும் போது உங்களுக்கு நல்ல திறமை இருக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே வெற்றி பெறலாம். நீங்கள் தமிழ்நாட்டில் மட்டும் சோதிடத்தை பார்ப்பதாக இருந்தால் சோதிடத்தை சும்மா படித்துவிட்டு பலனை சொல்லலாம் ஆனால் சோதிடத்தை வெளிமாநிலங்களில் நீங்கள் சொல்லும் போது உங்களுக்கு அதிக திறமை வேண்டும்.

கல்கத்தாவில் மட்டும் ஒருவன் ஒரு வருடம் சோதிட தொழில் செய்தால் அவனை எங்கும் எவனாலும் வெல்லமுடியாது அந்தளவுக்கு அறிவு வரும் ஏன் என்றால் கல்கத்தா மாந்தீரிகத்திற்க்கு பெயர் போன நகரம் நீங்கள் சாதாரணமாக அங்கு சென்று தொழில் செய்யமுடியாது. உங்களிடம் மிகப்பெரிய சக்தி இருந்தால் அங்கு நிலைக்கமுடியும். 

இதை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் உங்களுக்கு பூர்வ புண்ணியத்தைப்பற்றி அதிக தெரிவதற்க்கு உங்களிடம் நல்ல குரு வேண்டும் உங்களிடம் இஷ்டதெய்வம் நல்லமுறையில் இருக்கவேண்டும் குலதெய்வ அருள் வேண்டும் அப்பொழுது மட்டுமே சாத்தியப்படும்.

ஒரு சிலர் ஆழ்நிலை தியானத்தில் இதனை கண்டுக்கொள்வார்கள். இது நமக்கு ஒத்துவராது. ஏன் என்றால் வாடிக்கையாளரை வைத்துக்கொண்டு தியானம் செய்து சொல்கிறேன் என்றால் ஒருவரும் வரமாட்டார்கள். நமக்கு எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் சொல்கிற திறமை வேண்டும்.

பூர்வத்தைப்பற்றி சொல்லமுடியாது என்று அனைவரும் சொல்வார்கள் ஆனால் அதனை சொல்லமுடியும்.  அதற்கு நீங்கள் கடுமையான பயிற்சி செய்து இருக்கவேண்டும். 

பூர்வபுண்ணியம் உண்டா என்ற சந்தேகம் வருகிறது. பூர்வபுண்ணியத்தை பற்றி இந்து மதத்தில் என்ன சொல்லியுள்ளார்கள் என்று நாம் அறிவதற்க்கு முன்னால் ஆன்மீகத்தைப்பற்றி நன்றாக தெரிந்துக்கொண்டு இந்த ஐந்தாம் வீட்டை பார்த்தால் நன்றாக உங்களுக்கு புரியும்.


நான் வெளியூர் செல்வதால் சனிக்கிழமை வரை பதிவுகள் எழுதமுடியாது என்று நினைக்கிறேன். நான் செல்கின்ற ஊரில் நெட் வசதி இருக்கும் பட்சத்தில் அந்த ஊரில் இருந்து பதிவுகளை தருகிறேன். நன்றி நண்பர்களே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


1 comment:

S.Raja said...

நன்பரே!!! கலக்கிட்டிங்க போங்க......சொன்ன மாத்திரத்திலே....பூர்வ புண்ணியத்யை பற்றிய பதிவை தோடங்கிடிங்க.....என்னுடைய வாழ்த்துகள்.........