Followers

Monday, May 13, 2013

தசா: பகுதி 1


வணக்கம் நண்பர்களே!
                    எந்த ஒரு ஜாதகத்திலும் ஒருவனை வழிநடத்திச்செல்வது தசாநாதன். அந்த தசாநாதன் நல்ல முறையில் ஜாதகத்தில் அமைந்து தசா நடைபெற்றால் தசா முழுவதும் நல்ல பலனை அவருக்கு கொடுத்துவிடும். தசா நாதன் மட்டும் சரியில்லை என்றால் அந்த ஜாதகர் அந்த தசா முழுவதும் கஷ்டத்திலேயே இருக்கவேண்டும்.

தசாநாதனுக்கு அடுத்தபடியாக புத்திநாதனின் நிலையை காணவேண்டும். தசாநாதன் நன்றாக இருந்து வரும் புத்திநாதர்களும் அந்த தசாநாதனுக்கு ஏற்றபடி நடந்தால் தசா நன்றாக அமையும். ஒரு சில ஜாதகருக்கு தசாநாதன் சரியில்லை என்றால் வரும் புத்திநாதனும் அந்தளவுக்கு பலனை கொடுப்பதில்லை. புத்திநாதர்கள் நல்ல நிலையில் இருந்தாலும் ஒரளவுக்கு மட்டுமே பலனை தரும்.

நீங்கள் நினைக்கலாம் எப்படி தசாநாதன் மட்டும் நல்ல இருந்தா போதும் என்றால் புத்திநாதர்கள் எதற்கு என்று கேட்கலாம். புத்திநாதர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றி பலனை தருமே என்று கேட்க தோன்றும். உண்மை தான் நீங்கள் நினைப்பது போல ஒரு சிலருக்கு நடக்கும். நான் ஒரு சில ஜாதகர்களின் ஜாதகத்தை பார்க்கும் போது அந்த தசாநாதன் நன்றாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அந்த தசா முடியும் வரை வாரி வழங்கிவருகிறது. எப்படிபட்ட மோசமான புத்திநாதர்களும் வேலை செய்யமுடியாமல் போனதை அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன்.

எனக்கு தெரிந்த ஒரு நபரின் ஜாதகத்தில் மீன ராசி அவருக்கு சுக்கிரனின் தசா நடைபெற்றது பொதுவாக மீன ராசிக்கு சுக்கிர தசா அந்தளவுக்கு செய்யாது என்று சொல்லுவார்கள் ஆனால் இந்த நபருக்கு தசா முழுவதும் வாரி வழங்கியது. எந்த புத்திநாதர்களும் இடையூறு இல்லாமல் இவருக்கு வாரி வழங்கியது. அதைபோல் ஒருவருக்கு சுக்கிரனின் தசா முழுவதும் அவருக்கு பிரச்சினையை மட்டுமே கொடுத்தது.

தசா என்பது நாம் பயணிக்கும் வழி அந்த வழி நன்றாக இருக்கும் பட்சத்தி்ல் எந்த ஒரு தடையும் இல்லாமல் வாழ்க்கை பயணம் நன்றாக இருக்கும். செல்லும் வழியில் தடை ஏற்பட்டால் வாழ்க்கை சுவாராசியமாக இருக்காது.

ஒவ்வொரு தசாவும் நமது வாழ்க்கையின் வழியை மாற்றும் திசைகருவிகள். சரியான வழியில் போகபோகிறதா அல்லது கெட்டவழியில் போகபோகிறதா என்பதை உங்களின் ஜாதகத்தின் கிரகங்கள் தீர்மானிக்கும். வாழ்க்கை எப்படி எல்லாம் செல்லபோகபோகிறது என்பதை இனி வரும் பதிவுகளில் நாம் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: