Followers

Saturday, May 18, 2013

மந்திரபயிற்சி செய்பவர்களுக்காக


வணக்கம் நண்பர்களே !
                    மந்திர பயிற்சி செய்பவர்கள் அடிக்கடி என்னை தொடர்புக்கொண்டு பல சந்தேகங்களை கேட்டு  வருகிறார்கள். அவர்கள் கேள்வி கேட்கும் பொழுது ஒன்று மட்டும் எனக்கு நன்றாக தெரிகிறது. இது என்ன என்றால் பயம். எதையாவது செய்தால் பிரச்சினை வருமோ என்று தான் அவர்களின் பயம் இருக்கிறது. ஆன்மீகவாதிகள் நன்றாக பயம் கொள்ள செய்திருக்கிறார்கள்.

தேவையற்ற பயம்கொள்ள தேவையில்லை. நீங்கள் கடவுள் தானே கும்பிடுகிறீர்கள் அவரை கும்பிடும்பொழுது எப்படி உங்களை தண்டிப்பார். நான் உங்களுக்கு எந்தவிதத்திலும் கட்டுபாடு என்பதை நான் கொடுக்கவில்லை அதனால் உங்களுக்கு எப்படி இருக்கவேண்டும் என்று தோன்றுகிறதோ அப்படி இருந்துக்கொள்ளுங்கள். ஆன்மிகம் என்றாலே ஏதோ கட்டுபாடு கொண்டது என்பதை நாம் முறியடித்து தான் இந்த பயிற்சியை செய்துக்கொண்டு இருக்கிறோம். அனைவரும் இதனை செய்யவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் உங்களை செய்ய சொல்லுகிறேன்.

பல நண்பர்கள் நான் ஒரு தவறை செய்திருக்கிறேன் நான் இதனை செய்யலாமா என்று கேட்கிறார்கள். உலகத்தில் மனிதனாக பிறந்தால் தவறு செய்யாமல் இருக்கமுடியாது. அது குற்றம் என்று உங்களின் மனதில் நினைத்துக்கொண்டிருக்காமல் இந்த பயிற்சியை செய்யலாம். என்னுடைய நண்பர்கள் பலபேர் நிறைய தவறு செய்திருக்கிறார்கள் அவர்கள் என்னிடம் பயிற்சி செய்து நல்ல நிலையில் இன்று இருக்கிறார்கள். என்னிடம் நான் ஆன்மிகவாதி என்று பேசிய நண்பர்களை இதனை செய்துக்கொடுங்கள் என்று சொன்னால் ஒன்றையும் செய்வதில்லை. சும்மா ஊர் சுற்றி திரிந்துக்கொண்டுருப்பவர்களை இந்த பயிற்சியை செய்யுங்கள் என்று சொன்னேன் இவர்கள் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

நமது மதத்தில் மட்டும் உள்ள மிகப்பெரிய விசயம் என்ன என்றால் அனைத்தையும் ஆன்மீகத்தோடு இணைத்திருப்பார்கள். பிற மதங்களில் காமம் என்றால் அரக்கன் என்று சொல்லுவார்கள் அந்த காமத்திலேயே கடவுளை அடையமுடியும் என்பதையும் நமது மதத்தில் வைத்திருக்கிறார்கள். புகைபிடிப்பது கூட பிராணாயாமம் தான் ஆனால் அதில் உள்ள நஞ்சு உள்ளே செல்வதால் உடலுக்கு தீங்கு விளைக்கிறது.

நமது மதத்தில் அனைத்தும் கடவுள் செயல்போல் காண்பார்கள். நீஙகள் செய்கின்ற வேலை நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலும் கடவுள் தன்மையோடு செய்யும்பொழுது உங்களுக்குள்ளே இருக்கும் கடவுள் தன்மையை அறிந்துக்கொள்ளலாம். நீங்கள் மனதிற்க்குள் குற்ற உணர்ச்சியோடு அனைத்தையும் பார்ப்பதை தவிர்த்துவிட்டு உடனே நீங்கள் பயிற்சியில் ஈடுபடுங்கள்.

ஒவ்வொரு செயலிலும் ஆன்மீகம் கலந்து இருக்கிறது அதனை வெளிக்கொண்டுவருவது கடினமாக இருக்கும். மதுவில் கூட ஆன்மீகத்தில் உச்சத்தை அடையமுடியும் ஆனால் அது அனைவருக்கும் சரிப்பட்டுவராது என்பதால் ஒரு சில வழிமுறைகளை வைத்திருக்கிறார்கள் அந்த வழிமுறைகளை எளிய வழியில் செய்கிறோம்.

நீங்கள் தவறு செய்துவிட்டேன் என்ற குற்றஉணர்ச்சி எல்லாம் அடையதேவையில்லை ஏன் என்றால் ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக்கொண்டு சந்நியாசிகளாக திரிபவர்கள் எல்லாம் செய்கின்ற தவறைவிட நீங்கள் செய்யும் தவறு மிகமிக குறைவான ஒன்று. சந்நியாசிகள் நமக்கு தான் குழந்தைகளும் கிடையாது சொந்தமும் கிடையாது நாம் தவறு செய்தால் யாரையும் அந்த பாவம் கேட்காது என்று சொல்லிக்கொண்டு ஏகாப்பட்ட தவறுகளை செய்கிறார்கள்.

நீங்கள் இல்லறவாழ்க்கையில் இருப்பதால் நாம் தவறு செய்தால் நமது குழந்தைகளுக்கு பாவம் போய்சேரும் என்று நினைத்துக்கொண்டு ஒரு தவறும் செய்வதில்லை. உண்மையை சொல்ல போனால் நீங்கள் தான் வணங்குவதற்க்குரியவர்கள் என்னைப்பொருத்தவரை நீங்கள் தான் கடவுளுக்கு சமமானவர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: