Followers

Monday, May 6, 2013

காயத்ரி மந்திர பயிற்சி



வணக்கம் நண்பர்களே !
                     வரும் 12/05/2013 அன்று முதல் காயத்ரி மந்திர பயிற்சியை தொடங்க நல்ல நாள்களாக அமைகிறது. நமது பிளாக்கிற்க்கு வரும் நண்பர்கள் பல பேர் இதனை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் இதுவரை தொடங்கவில்லை என்றாலும் வரும் நாட்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். 

நீங்கள் இதுவரை எந்தவித ஆன்மீகபயிற்சி பெறவில்லை என்றாலும் இந்த பயிற்சியை எடுத்து பயன்பெற்றுக்கொள்ளுங்கள். மிகவும் எளிதான ஒரு பயிற்சி தான் இது. உங்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தி இதற்கு உண்டு. இதற்கு நீங்கள் கொடுக்கும் உழைப்பு குறைவான ஒன்று. 

நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாம் என்ன காயத்ரி மந்திரம் தானே இதில் என்ன மிகப்பெரிய மாற்றம் வந்துவிடபோகிறது என்று நினைக்கதோன்றும். காயத்ரி மந்திரத்துடன் பலவித பயிற்சிகளையும் இதில் சேர்த்து தருகிறேன். அதனால் நீங்கள் இதுவரை செய்யவில்லை என்றால் உடனே தொடர்புக்கொண்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

பல நண்பர்கள் காயத்ரி மந்திர பயிற்சியை செய்துக்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு நடந்துள்ள அற்புதத்தை வெளியிட்டால் பல பதிவுகள் போடவேண்டியிருக்கும். அதை எல்லாம் வெளியிடவில்லை. இந்த அற்புதத்தை நீங்களும் செய்து பயனடைய கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே! வரும் 9-5-2013 அன்று பாண்டிச்சேரி செல்கிறேன். பாண்டிச்சேரியில் நீங்கள் என்னை சந்திக்கலாம். என்னை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும். Cell no 9551155800.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: