Followers

Sunday, May 12, 2013

மந்திர பயிற்சி விளக்கம்



வணக்கம் நண்பர்களே!
                     இன்று பல நண்பர்கள் காயத்ரி மந்திர பயிற்சியை தொடங்கியுள்ளார்கள். அனைவருக்கும் கூடியவிரைவில் சித்திகிடைக்க நமது அம்மன் துணைபுரியும். நீங்கள் தொடர்ந்து செய்துக்கொண்டு வாருங்கள். சில நண்பர்கள் 21 நாள் முடிந்தவுடன் நிறுத்திவிடுகிறார்கள். அவ்வாறு நிறுத்தகூடாது தொடர்நது செய்துவாருங்கள்.

21 நாட்கள் முடிந்தவுடன் என்னை தொடர்புக்கொள்ளுங்கள் என்று மட்டும் தான் சொன்னேன். 21 நாட்கள் முடிந்தவுடன் நிறுத்தவேண்டும் என்று சொல்லவில்லை. தொடர்ந்து 108 நாட்கள் செய்தால் தான் ஒரு முழுமை பெறும். ஒவ்வொரு நாட்களும் ஒரு புதிய அனுபவம் கண்டிப்பாக உங்களுக்குள் நடைபெறும். 

நீங்கள் பயிற்சி எடுக்கும் தெய்வத்தைப் பற்றி வெளியில் சொல்லவேண்டும். நான் இந்த தெய்வத்திற்க்கு பயிற்சி எடுக்கிறேன் என்று வெளியில் பெருமையாக சொல்லி அதுவே உங்களுக்கு பிரச்சினையாக வரகூடும். ஏன் என்றால் நீங்கள் கஷ்டபட்டு உரு ஏற்றும் தெய்வத்தை ஒரு சிலர் எடுத்துக்கொண்டுவிடுவார்கள். இந்த காலத்தில் மாந்தீரகம் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் போல் காட்டிக்கொள்வதில்லை. நல்ல வேலையில் இருப்பவர்கள் போல் நல்ல உடை அணிந்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் இதனை போய் சொல்லி நீங்கள் மாட்டிக்கொள்ள வேண்டாம். எக்காரணம் கொண்டும் வெளியில் சொல்லாதீர்கள்.

எனது நண்பர் ஒருவர் இந்த பதிவு எழுதும்போது தொடர்புக்கொண்டு பேசினார். காலையில் எழுந்து வீட்டில் விளக்கு ஏற்றுவது வீடு லட்சுமிகரமாக இருக்கிறது என்று சொன்னார். உண்மையான ஒரு விசயம் தான் இது. நீங்கள் காலையில் எழுந்து இந்த பயிற்சி செய்வதால் உங்களின் வீட்டில் உள்ளவர்களுக்கும் புண்ணியம் கிடைக்கும். அதிகாலையில் வீட்டில் தீபம் ஏற்றுவது அதிவிசேஷமான ஒன்று. லட்சுமி நிரந்தரமாக உங்களின் வீட்டில் தங்கும். 

காலையி்ல் இந்த பயிற்சியை மேற்க்கொள்ளும் பொழுது ஆண்களாக இருந்தால் வேஷ்டி அணிந்துக்கொண்டு செய்யுங்கள். காவி வேஷ்டியாக இருக்கலாம். பெண்களாக இருந்தால் சேலை அணிந்துக்கொண்டு செய்யலாம். பூஜையறையில் மட்டும் அணிந்துக்கொள்ளுங்கள் வெளி இடங்களுக்கு செல்லும்பொழுது வேண்டாம். 

அனைவரும் இந்த பயிற்சியை மேற்க்கொண்டு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

KJ said...

Useful info sir. Thanks..

rajeshsubbu said...

//*KJ said...
Useful info sir. Thanks.. *//
நல்லது