Followers

Tuesday, May 21, 2013

ராகுக்கு பரிகாரம்



வணக்கம் நண்பர்களே!
                    ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு தசா மற்றும் ராகு புத்தி நடைபெறும் காலத்தில் குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படும். ஜாதகத்தில் எந்த இடத்தில் ராகு அமர்ந்திருக்கிறதோ அந்த இடத்திற்க்கு தகுந்தார் போல் பிரச்சினையை கொடுக்கும். ராகு வந்தாலே அதிகமாக பாலியல் தொடர்பான பிரச்சினை தலைதூக்கும் அல்லது மாந்தீரீக பாதிப்பு ஏற்படும்.

ராகுவின் பிடியில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள காளி தெய்வத்தை வணங்கவேண்டும். காளி தெய்வம் இந்த மாதிரி பாதிப்புக்களில் இருந்து உங்களை பாதுக் காக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் காளியை வணங்கலாம். பெரும்பாலும் அனைத்து ஊர்களிலும் காளி தெய்வம் இருக்கும். காளி தெய்வம் கற்சிலையாக இருந்தால் நல்லது. இப்பொழுது காளி தெய்வத்தை சிமெண்ட் கொண்டு செய்கிறார்கள். கற்சிலைக்கு இருக்கும் சக்தி சிமெண்ட் கொண்டு செய்யும் தெய்வத்தின் சிலைக்கு இருப்பதில்லை.

ஒருவர் பிரபலமாக வேண்டும் என்றால் அவர் காளியை வணங்கவேண்டும். ஒருவர் காளி் தெய்வத்திற்க்கு தன்னை அர்ப்பணித்தால் அவரை அந்த காளி மிக உயர்ந்த இடத்திற்க்கு கொண்டுச்செல்லும். ராகு தசா புத்தி நடக்கும்பொழுது நீங்கள் ஒரு வாரம் கூட விடாமல் காளியை வணங்கி வர வேண்டும். ராகு காளியை வணங்கவிடாமல் பல தடைகளை ஏற்படுத்துவார்.வரும் தடைகளை மீறி நீங்கள் வணங்கி வரும்பொழுது ராகுவின் பிடியில் இருந்து தப்பிக்கலாம்.

ராகுவிற்க்கு பரிகாரமாக பாம்பு சிலைக்கு அபிஷேகம் செய்ய சொல்லுவார்கள். அப்படியும் செய்யலாம் ஆனால் உங்களின் கைகளால் அபிஷேகம் செய்யுங்கள் அப்பொழுது மட்டும் உங்களின் தோஷம் நீங்கும். அபிஷேகம் நல்லமுறையில் செய்ய வேண்டும். சில பேர் கடமைக்கு என்று செய்வார்கள் அப்படி செய்யகூடாது மனதிற்க்கு நல்ல விருப்பம் பட்டு நிறைவாக செய்யவேண்டும்.

அபிஷேகம் செய்யும் பொழுது நல்லெண்ணையை பயன்படுத்துங்கள். வாசனை திரவியங்கள் அதிகளவு பயன்படுத்தலாம். அபிஷேகம் முடிந்து நல்ல சாம்பிராணி மற்றும் மணம் நிறைந்த ஊதுவத்தியை பயன்படுத்துங்கள்.

அபிஷேகம் செய்து கடைசியில் தீபராதனை காண்பிக்கும் பொழுது உங்களின் ஜாதகத்தை தட்டில் வைத்து தீபராதனையை காட்டவேண்டும். உங்களின் ஜாதகம் முதன் முதலில் எழுதப்பட்ட ஜாதகமாக இருந்தால் நல்லது. இவ்வாறு செய்து ராகு தசா ராகு புத்தி நடப்பவர்கள் தம்மை காப்பாற்றிக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

KJ said...

Useful info sir. Thanks

rajeshsubbu said...

வருக KJ நன்றி