Followers

Monday, May 27, 2013

ஆன்மீக பயண அனுபவம் 2


வணக்கம் நண்பர்களே !
                     திருவண்ணாமலையில் கோவில் அருகில் போய் அமர்ந்திருநதேன். சரியாக எட்டு மணிக்கு மேல் பெங்களூரில் இருந்து இளங்கோவன் என்ற நண்பர் வந்தார். அடுத்தபடியாக பாலாஜி என்ற நண்பர் சென்னையில் இருந்து வந்தார். மூன்று பேரும் பேசிக்கொண்டு இருந்தோம். நண்பர் பாபு அவர்கள் சரியாக 9 மணிக்கு மேல் வந்திருந்தார்.

பாபு அவர்களே நான் ஏற்கனவே கிரிவலத்தில் சந்தித்து இருக்கிறேன். நமது பிளாக்கிற்க்கு சிறந்த ஆலோசகர் அவர். அவர் சொந்த ஊர் வேலூர். 359 உறுப்பினர்களில் மூன்று பேர் வந்ததே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக தான் இருந்தது. நிறைய நண்பர்கள் போன் செய்து எனக்கும் அண்ணாமலையாரிடம் வேண்டிக்கொண்டு வாருங்கள் என்று சொல்லிருந்தனர். அவர்களுக்கும் சேர்ந்து பிராத்தனை செய்தேன்.

சரியாக எட்டு மணிக்கு எனது குரு போன் செய்தார் எங்கே டா இருக்கிறாய் என்றார். சாமி நான் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்க்காக கோவிலில் இருக்கிறேன் என்றேன். என்னடா திடீர் என்று கிரிவலம் எல்லாம் செல்லுகிறாய் என்றார். நான் கிரிவலம் சென்று ஒரு வருடம் சென்றுவிட்டது அதான் போகலாம் என்று வந்தேன் என்றேன். நீ கார்த்திகை அன்று கிரிவலம் சென்றாய் குபேர கிரிவலம் எல்லாம் சென்றாயே எப்படி ஒரு வருடம் ஆகும் என்றார். நான் அவர்கிட்ட பேசும் பொழுது ரொம்ப ஜாக்கிரதையாக பேசுவேன் ஏன் என்றால் ஒரு வார்த்தை தவறுதலாக சொன்னாலும் சரியாக அந்த இடத்தில் பிடித்துவிடுவார். அப்புறம் திட்டு வாங்க வேண்டும். ஏதோ திருவண்ணாமலை சென்றதால் திட்டவில்லை சரி போய்விட்டு வா என்றார்.

வேறு கோவிலுக்கு சென்றால் நல்ல வாங்கி கட்டிக்கொள்வேன். திருவண்ணாமலை மேல்மலையனூர் திருவக்கரை மட்டும் அனுமதி உண்டு. வேறு கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது. இந்த மூன்று கோவிலுக்கும் அவர் வருவார். வேறு கோவிலுக்கு செல்லுகிறேன் என்றால் திட்டுவிழும். ஒரு சில கோவில்கள் இருக்கிறது அது எப்பொழுதாவது செல்வது வழக்கம்.

சரியாக 9 மணிக்கு மேல் கோவிலிருந்து நான்கு பேரும் கிரிவலம் சென்றோம். மூன்று பேர் வந்ததே அதிகம் என்று தான் நினைத்தேன் ஏன் என்றால் அவர்கள் கேட்ட கேள்விக்கு கிரிவலம் முடியுவரை என்னால் தொடர்ந்து பதில் தரமுடியவில்லை. இந்த காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும் ஆனால் அவர்களுக்கு வழி நடத்த ஒரு ஆன்மீகவாதி கிடையாது என்பது அவர்களின் கேள்விகளிருந்தே தெரிகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்பதை கற்று கொடுத்தால் போதும். அதுவே சிறந்த ஆன்மீகமாகவே இருக்கும்.  ஆன்மீககுருக்களின் பற்றாக்குறை இப்பொழுது அதிகமாகவே இருக்கிறது.

வழி நெடுகிலும் அவர்கள் நிறைய கேள்வி கேட்டார்கள் அவர்களுக்கு பதில் அளித்தேன். அவர்கள் கேட்ட பொதுவான கேள்விகளுக்கு பதில் அளித்ததை தனிப்பதிவாக போடுகிறேன். அதில் நீங்கள் படித்துக்கொள்ளுங்கள். கிரிவலம் செல்லும்பொழுது வந்திருந்த நண்பர்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்று அண்ணாமலையாரிடம் பிராத்தனை வைத்தேன். அதைபோல்  என்னை தொடர்புக்கொண்டு கிரிவலத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று கேட்ட நண்பர்களுக்கும். மற்றும் நமது பதிவிற்க்கு வரும் நண்பர்களுக்கும் வேண்டிக்கொண்டேன்.

நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் ஒரு ஆன்மீகவாதியோடு கோவிலுக்கு செல்லுங்கள். ஆன்மீகவாதியோடு செல்லும்பொழுது அதிகமான சக்தியை உங்களின் ஆத்மா பெறும். இதனை நான் எனது குரு மூலம் அறிந்திருக்கிறேன். ஒரு சந்நியாசியோடு ஒருவன் இருக்கும்பொழுது நமது கர்மவினை குறையும். ஆன்மீகத்தில் இருப்பவர்களோடும் நாம் இருக்கும்பொழுது நமது கர்மவினை குறையும்.  சென்று வந்த கிரிவலத்தில் அண்ணாமலையாரை சுற்றி கிரிவலம் வந்ததால் அண்ணாமலையாரின் ஆசி கிடைத்தது. நமது குருவின் ஆசியும் கிடைத்தது. கண்டிப்பாக நமது அம்மனின் ஆசி அவர்களுக்கு கிடைத்திருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

4 comments:

dreamwave said...

உங்கள் பெரும்தன்மைக்கு நன்றி

rs said...

Its true to be with great soul

rajeshsubbu said...

//* dreamwave said...
உங்கள் பெரும்தன்மைக்கு நன்றி *//

அனைத்தும் இறைவனின் செயல்.

rajeshsubbu said...

//* rs said...
Its true to be with great soul *//
நன்றி நண்பரே