Followers

Tuesday, May 14, 2013

ஆன்மீக அனுபவங்கள் 90


வணக்கம் நண்பர்களே!
                    ஆத்மாவைப்பற்றி எழுதி வெகுநாட்கள் சென்றுவிட்டது இனி ஆத்மாவைப்பற்றி பார்க்கலாம். ஆத்மாவைப்பற்றி எண்ணம் ஒருவருக்கு எப்பொழுது ஏற்படும்?

உலகத்தில் ஒருவனுக்கு ஒரு கட்டம் வரும் அது என்ன என்றால் அவனை சுற்றி ஏதோ ஒரு மரணச் சம்பவம் நடைபெறும். அந்த மரணச்சம்பவம் அவனுள் மாற்றத்தை ஏற்படுத்தும்மானால் அவனுக்கு ஆத்மாவைப்பற்றி எண்ணத்தோன்றும். உலகத்தில் உள்ள ஞானிகளுக்கு இது ஏற்பட்டுருக்கும். விபத்தில் சிக்கி ஒரு நிமிடத்தில் தப்பிப்பவனுக்கு இது வந்திருக்கும். ஆத்மாவைப்பற்றி எண்ணம் வர இது தான் தகுதி என்பதில்லை மரணத்தைப்பற்றி அவனுள் எழும் எண்ணம் தான் ஆத்மாவைப்பற்றி சிந்திக்க தூண்டுகிறது.

எல்லா மனிதருக்கும் ஆரம்பம் பிறப்பு என்றாலும் அவனை மிகவும் சிந்திக்க வைப்பது இறப்பு தான். உலகத்தில் உள்ள அனைவருக்கும் இறப்பு வருகிறது. இறப்பைப்பற்றி அதிகமாக சிந்திப்பவனுக்கு அது பிறப்பின் மறுபக்கம் என தெரிகிறது.

பிறப்பதால் தான் இறப்பு வருகிறது. இறக்காமல் இருக்கவேண்டும் என்றால் பிறக்காமல் இருக்கவேண்டும். இதனை நன்கு சிந்திப்பன் தான் ஆத்மாவைப்பற்றி உணர ஆரம்பிக்கிறான். எவன் ஒருவன் இறப்பைப்பற்றி சிந்திக்கிறானே அவன் ஆத்மாவைப்பற்றி அறிய தகுதியுள்ளவனாகிறான்.

இறப்பைபற்றி அதிகம் சிந்திக்க தூண்டுபவையாக அவனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்த மனிதனின் ஜாதகம் பல வழிகளை காட்டுகிறது. ஜாதகத்தில் லக்கினாதிபதி எட்டாம் வீட்டில்  அமர்ந்தால் அவன் மரணத்தைப்பற்றி அதிகம் சிந்திக்க தூண்டும். 

மூன்றாம் வீடு ஆறாம் வீடு எட்டாம் வீடு பனிரெண்டாம் வீடு ஆகியவை அதிகமாக தூண்டும். ஒருவன் அதிகமாக பாதிக்கப்படும்பொழுது அவன் மரணத்தைப்பற்றி சிந்திக்க தூண்டும். இந்த வீடுகளால் அதிகமாக ஞானியாகிவிடுவார்கள்.

இந்த காலத்தில் இறப்பு வீட்டிற்க்கு சென்றால் செல்லும் அனைவரும் தனக்கு மரணம் வருவதில்லை என்று நினைப்போடு தான் இருக்கிறார்கள். இறப்பு வீட்டிற்க்கு சென்று அங்கு ஜாலியாக இருப்பது தான் அதிகமாக செய்கிறார்கள். மகாபாரதத்தில் யட்சன் தர்மரிடம் இந்த உலகத்தில் வேடிக்கையான விஷயம் என்றால் என்ன கேட்பார். அதற்கு தர்மர் ஒருவன் தன்னுடன் இருப்பவர்கள் அனைவரும் இறக்கும்பொழுது தான் மட்டும் இறக்கமாட்டேன் நான் சாஸ்வதாமாக இருக்கபோகிறேன் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறானே அவர்களை பார்க்கும்பொழுது வேடிக்கையாக இருக்கிறது என்றார். 

தான் இறக்கமாட்டேன் என்று நினைக்காமல் மரணத்தில் என்ன இருக்கிறது என்பதை சிந்திபவனுக்கு ஆத்மாவைப்பற்றி எண்ணதோன்றும்.மரணத்தை பற்றி சிந்திக்கும்பொழுது ஆத்மாவைப்பற்றி எண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.

தொடரும்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: