Followers

Monday, September 1, 2014

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                    மாதத்தின் முதலே சக்தியைப்பற்றி எழுதிவிடுவோம். சக்தியை பற்றி நான் சொல்லிக்கொண்டு வரும்பொழுதே உங்களுக்கு நிறைய விசயம் தெரிந்து இருக்கும். இனியும் நிறைய எழுதுவேன் அதனை எல்லாம் படித்து தெரிந்துக்கொண்டு முடிந்தால் நீங்களும் பின்பற்றி வாருங்கள்.

சக்தி என்று வந்தாலே அதனை நீங்கள் மிகவும் மதிக்கவேண்டும். நாம் நன்றாக மதித்தால் நமக்கு நிறைய நன்மைகள் தரும். உங்களின் ஊரில் உங்களின் குலதெய்வம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த குலதெய்வத்தை நீங்கள் வணங்கவில்லை என்றால் உங்களுக்கு அது எதுவும் செய்து தராது.

நீங்கள் வணங்கும் தெய்வத்திற்க்கு ஒரு விளக்காவது ஏற்றி வைக்கவேண்டும். அப்படி ஏற்றி வைத்தால் மட்டுமே அதனின் சக்தியை நாம் பயன்படுத்தமுடியும்.

மனிதர்கள் நிறைய பேர் என்ன செய்வார்கள் அவர் அவர்களின் குலதெய்வத்திற்க்கு சென்று வேண்டுதலை மட்டும் செய்வார்கள். ஒரு சிலர் கோவிலுக்கு கூட செல்வதில்லை சும்மா வீட்டில் இருந்தே வேண்டுதலை வைத்துவிட்டு ஏதுவும் தெய்வம் தரவில்லை என்று குறைச்சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

நாம் எதையாவது முதலிலேயே அந்த தெய்வத்திற்க்கு கொடுத்துவிட்டு நாம் வேண்டுதலை வைத்தால் அது உடனே நடத்திக்கொடுத்துவிடும். சக்தியை நாம் புரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் நாம் நடந்துக்கொண்டால் நாம் நன்மை பெறலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Nam udalil ulla sakthikku eppati pakthi seluthuvadhu?eppati upayokappatuthuvadhu?