வணக்கம் நண்பர்களே!
நண்பர் பரமேஸ்வர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்ருந்தார். சொகுசாக இருந்தால் எப்படி வேலை செய்வது என்று கேட்டார்.
வேலை செய்வது தவறு என்று நான் சொல்லவில்லை. வேலை செய்யுங்கள் வேலை முடிந்து வீட்டிற்க்கு வந்தவுடன் உங்களின் உடலுக்கு செய்யவேண்டிய கடமையை செய்யவேண்டும்.
உங்களின் உடலை நன்றாக சுத்தம் செய்து அதற்கு நல்ல மரியாதை செய்யவேண்டும். உடலை சொகுசாக வைத்துக்கொள்வது என்றால் இப்படி தான். சும்மா உட்கார்ந்துக்கொண்டு சொகுசாக வைத்துக்கொள்கிறேன் என்று வீணாக காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்க கூடாது.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் நாள் முழுவதும் கடைக்களுக்கு பொருட்களை போடும் வேலையை செய்துக்கொண்டிருக்கிறார். மாலை நேரம் இந்த வேலை முடிந்தவுடன் நன்றாக குளித்துவிட்டு நல்ல ஆடைகளை போட்டுக்கொண்டு வெளியில் வருவார்.
காக்கும் கடவுள் யார்? அவர் எப்படி தன்னை அலங்காரம் செய்துக்கொள்கிறார். நமக்கு என்ன தேவை என்பதை கடவுளுக்கு செய்து அதனை சொல்லாமல் சொல்லுகின்ற மதம் நமது மதம்.
உடலை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால் அவ்வளவு தான். அது சோம்பலாகிவிடும். தன் மீதே ஒரு வெறுப்பு வந்துவிடும். இதில் பல சூட்சமங்கள் இருக்கின்றன நேரில் என்னை சந்திக்கும்பொழுது இதனைப்பற்றி கேட்டுக்கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
3 comments:
வணக்கம் !
அருமையான நற் செய்தியினைச் சொன்னீர்கள் ஐயா !சுத்தம் சுகம் தரும் !நாள் முழுவதும் ஓய்வின்றி உழைக்கும் உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு என்பது மிக மிக அவசியமாகிறது .அதுவே சுத்தத்துடன் கூடிய ஓய்வாக
இருப்பது உடலுக்கும் மனதிற்கும் சுகந்தம் அளிக்கும் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை ! மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
வணக்கம் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Mikka nanri sir.
Post a Comment