Followers

Tuesday, September 16, 2014

காயத்ரி தேவி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா?


வணக்கம் நண்பர்களே!
                      காயத்ரி தேவி படத்தை வைத்து வீட்டில் வணங்கலாமா என்று ஒரு நண்பர் கேட்டுருந்தார்.

வீட்டில் நீங்கள் சாந்தமான தெய்வத்தை வைத்து வணங்குவது நல்லது. அதே நேரத்தில் பெரும்பாலும் குலதெய்வத்தை வைத்து மட்டும் வணங்கினால் நல்லது. 

ஒரு சிலர் எந்தந்த கோவில்களுக்கு எல்லாம் செல்லுகிறார்களாே அந்த கோவிலின் தெய்வ படத்தை வாங்கி வந்து வீட்டில் வணங்குவார்கள். இதனை எல்லாம் தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் ஒரு சில காலங்களில் அந்த படங்களை எல்லாம் பழைமையாக போய் அதனை வெளியில் போட நினைப்பீர்கள்.

ஒரு தெய்வபடத்தை வெளியில் அல்லது கோவில்களில் கொண்டு வைக்கும்பொழுது அவர்களும் ஒரு சில காலங்களில் தூய்மை செய்யவேண்டும் என்று எண்ணி வெளியில் போட்டுவிடுவார்கள். இது எல்லாம் நமக்கு தேவையில்லை என்பதால் குலதெய்வ படத்தை மட்டும் வைத்து வணங்குவது நல்லது.

எல்லாவற்றையும் விட மேலானது விளக்கு வைத்து மட்டும் வணங்குவது. விளக்கு மட்டும் வைத்து வணங்கினால் அது மிகவும் சிறப்பான ஒன்று.பொதுவாக நான் காயத்ரி மந்திரம் செய்பவர்களுக்கு விளக்கு மட்டும் போதும் என்று சொல்லுவேன். அதனால் நீங்கள் விளக்கு மட்டும் வைத்து வணங்குவது நல்லது.

முதல் நிலையில் இருப்பவர்களுக்கு மட்டும் படம் தேவைப்படும். கொஞ்ச நாள் சென்ற பிறகு மந்திர பயிற்சி என்று வந்துவிட்டால் எதுவும் தேவைப்படாது. உருவம் அற்ற தெய்வத்தை ஒளிவடிவில் மட்டும் காண்பது மிக சிறப்பான ஒன்று. 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

Sir,

Tell us some thing about Mahalaya batcham. Is it possible to recognise our forefathers (munnorgal) at this time in home?

Thanks,
Sivakumar TR