வணக்கம் நண்பர்களே!
ஒரு நண்பர் என்னிடம் பேசும்பொழுது சொன்னார். தன்னம்பிக்கையோடு செயலை செய்தால் வெற்றி கிடைத்துவிடும் ஆனால் நீங்கள் ஆன்மீகம் வேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லாம் தன்னம்பிக்கையோடு அனைத்து வேலையும் செய்கிறார்கள். அனைவருக்கும் ஏன் வெற்றி கிடைப்பதில்லை. உழைத்தவர்கள் அனைவருக்கும் வெற்றி கிடைத்து இருந்தால் ஆன்மீகம் என்பது வளரவே வளராது. இத்தனை கோவில்கள் மற்றும் ஆன்மீகம் சம்பந்தபட்ட செயல்கள் நடைபெறாது.
தன்னம்பிக்கையோடு செயல்படும்பொழுது அனைத்தையும் வெற்றுவிடலாம் என்று தான் ஒவ்வொரு வேலையும் செய்கின்றனர் ஆனால் அதனை தாண்டி வேறு ஒன்று உள்ளது என்பதை வாழ்க்கையில் நிறைய தோல்விகள் வரும்பொழுது மட்டுமே தெரியவருகிறது.
பல பேர்கள் சோதிடம் என்பது பொய் என்று சொல்லுவார்கள் நீங்களும் இப்படிப்பட்டவர்களை சந்தித்து இருப்பீர்கள். இவர்கள் அடுத்தவர்களிடம் சோதிடம் என்பது பொய் என்று சொல்ல வேண்டியதில்லை. சோதிடத்திடம் சவால் விட்டுக்கொண்டு அவர்கள் வாழலாம். வாழ்நாள் முழுவதும் நான் ஜாதகத்தை தொடாமல் இருந்துவிடுவேன் என்று சவால் விட்டுக்கொண்டு இருந்தால் ஒரு நாள் அவர்கள் சோதிடத்திடம் தோற்றுபோவது அவர்களுக்கு தெரியவரும்.
என்னிடம் நிறைய நண்பர்கள் சொல்லுவார்கள். சார் என்னிடம் தன்னம்பிக்கை எல்லாம் இருக்கிறது ஆனால் செயல் தோல்வியை தருகிறது என்பார்கள். அவர்களிடம் நான் சொல்லுவது தன்னம்பிக்கையோடு ஆன்மீகத்தை சேருங்கள் என்று சொல்லுவேன். தன்னம்பிக்கையோடு ஆன்மீகத்தை சேர்த்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
3 comments:
Ithai purinthukonda pinpu thaan enakku aanmeekathil naattam vanthathu.
Dear sir
Most of the people don't know the correct birth time. What is the solutions for write the correct jadagam
True...
Post a Comment