Followers

Thursday, September 4, 2014

இசையில் மயங்கும் கடவுள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு மனிதன் எளிமையாக கடவுளை அடைய வழி என்ன என்றால் அது இசை மட்டும் தான். இசையில் தான் கடவுளை அடைய எளிய வழி. இசை நாம் கேட்டாலே போதும் அது இறைவனிடத்தில் கொண்டு செல்லும்.

இந்தியாவில் உள்ள அனைத்து இசையும் எளிதில் உங்களை கடவுளிடம் கொண்டு செல்லும். முக்கால்வாசி சாமியார்கள் தியானத்தில் கண்டிப்பாக இசையை வைத்து தியான வகுப்பு வைப்பார்கள். 

ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு விதமான இசையை எழுப்பி அதனை ஆராதனை செய்வதும் இசையால் அந்த கடவுளை அடையமுடியும் என்ற காரணத்தால் இசையை முதன்மைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

நாம் என்ன தான் மந்திரங்களை சொன்னாலும் கோவிலில் இசையை அடிப்பவர்களிடம் அந்த கோவிலில் உள்ள தேவதை அவரின் பேச்சிற்க்கு செவிக்கொடுத்து கேட்கும்.

நான் கோவிலுக்கு செல்லும்பொழுது அந்த கோவிலில் மேளம் தாளம் இசைப்பவர்களிடம் பணம் கொடுத்துவிட்டு வருவேன். அது எதனால் என்றால் அவர் நன்றாக கோவிலுக்கு இசையை அர்ப்பணிக்கவேண்டும் என்பதால் அப்படி செய்வேன்.

தமிழ்நாட்டில் உள்ள கோவிலுக்கு தமிழகத்தில் ஆதியில் உள்ள இசையை மட்டும் இசைக்கப்படவேண்டும். மேளம் நாதஸ்வரம் போன்ற இசைகருவிகள் மட்டும் இசைக்கவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கோவிலுக்களுக்கு கேரளாவில் இருந்து கொண்டு வந்து சண்ட மேளத்தை இசைக்க கூடாது. அதுபோல் கேரளா கோவிலில் தமிழ்நாட்டில் உள்ள இசைக்கருவிகளை இசைக்ககூடாது.

ஏன் அப்படி இசைக்ககூடாது என்றால் கோவிலில் உள்ள சக்திக்கு பிரச்சினையை அது கொடுக்கும். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் உள்ள கட்டடகலை வேறு. கேரளாவில் உள்ள கோவிலில் உள்ள கட்டடகலை வேறு. சக்திக்கு பிரச்சினை வரும் என்பதால் இதனை சொல்லுகிறேன்.

இப்பொழுது கோவிலில் மின்சார மேள தாளங்களை இசைக்கிறார்கள். ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கமுடிவதில்லை என்ற காரணத்தால் அப்படி செய்கிறார்கள். அதுவும் தவறான ஒன்று தான். இசைப்பற்றி எழுதவேண்டும் என்றால் எழுதிக்கொண்டே போகலாம். நேரம் கிடைக்கும்பொழுது எழுதுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Thinam thinam TMS paadiya pakthi padalkal kettaal pakthi thannaal varum.