Followers

Sunday, November 2, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                      BALA said...
Sir,

How to send the contributions to the temple for the Annabishkam for purchase of rice .Thanks

நேற்று என் நண்பரிடம் சொல்லி ஒரு மூட்டை அரிசி வாங்கிக்கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டேன். பொதுவாக கோவிலுக்கு செய்யும் செலவு எல்லாம் ஜாதககதம்பத்தின் வழியாக வரும் பணத்தை வைத்து செய்துக்கொண்டிருக்கிறேன். ஜாதககதம்பத்தின் வழியாக வரும் நண்பர்கள் அம்மன் கோவிலுக்கு மட்டும் பங்குக்கொள்ள வைப்பதை தவிர வேறு எந்த தொந்தரவும் செய்வதில்லை.

ஜாதககதம்பத்திற்க்கு போதிய வருமானம் வந்துக்கொண்டிருப்பதால் நானே பல கோவிலுக்கு பல வருடங்களாக பல நல்ல பணிகளை செய்துக்கொண்டிருக்கிறேன். என்ன ஒன்று என்றால் அதனை வெளியில் காட்டிக்கொள்வதில்லை. 

பல கோவில்களுக்கு மக்கள் யாரும் செல்வதில்லை அந்த கோவிலுக்கு நம்மால் முடிந்த சிறு உதவியை அவ்வப்பொழுது செய்துக்கொண்டு வருகிறேன். ஜாதககதம்பத்தின் வழியாக வரும் பணம் எல்லாம் இப்படி தான் செல்கிறது. என்னுடைய தனிப்பட்ட செலவுக்கு கூட இதில் இருந்து அதிகம் எடுத்துக்கொள்வதில்லை. எனக்கு ஏற்படும் பெரிய செலவுகளை கூட அவ்வப்பொழுது கடன் வாங்கிக்கொண்டு செய்வது கூட உண்டு.

எந்த ஒரு கோவிலுக்கு சென்றாலும் என்னால் முடிந்தளவு உதவியை செய்துக்கொண்டு வருவது உண்டு. இந்த ஆலயத்தை கூட பாருங்கள் நான் பதிவில் தந்தவுடன் பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார். இந்த ஊரில் இருந்துக்கொண்டு எங்களுக்கு கூட தெரியவில்லை என்றார்கள். இப்படி தான் பல கோவில்கள் நம் நாட்டில் இருக்கிறது. 

நான் பல ஊர்களுக்கு செல்லும்பொழுது அந்தந்த ஊரில் உள்ள பழைமையான கோவில்களை எல்லாம் உங்களுக்கு காட்டிவிடுகிறேன். அந்த பகுதியில் நீங்கள் இருந்தால் அதற்கு தேவையான உதவியை செய்துக்கொடுத்துவிடுங்கள். தொடர்ந்து கண்காணித்து செய்துக்கொடுங்கள் அது போதும். 

என்னால் பணவசதி முடியாதப்பொழுது உங்களிடம் கேட்கிறேன். அப்பொழுது நீங்கள் உதவி செய்தால் போதும். உங்களை போல் உள்ள சில நல்ல மனதுடைய நண்பர்களால தான் இந்த உலகம் இயங்குகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: