Followers

Saturday, May 2, 2015

நம்பினால் நம்புங்கள்


வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் தினசரி செய்திதாள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் விபத்துக்கள் நடைபெறுவதை காண்பிப்பார்கள். தினமும் ஏதாவது விபத்துக்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றது.

விபத்துக்கு பல காரணங்களை சொல்லுகின்றார்கள். ஒரு இடத்தில் மட்டும் அதாவது ஒரு பகுதியில் மட்டும் அடிக்கடி விபத்து நடைபெறும் அந்த பகுதியில் விபத்துபகுதி என்று பலகை எழுதி வைத்து இருப்பார்கள்.

ஒரே இடத்தில் அடிக்கடி விபத்து நடந்தால் அந்த பகுதிக்கு அருகில் ஏதாவது ஒரு தேவதை இருக்கும். அந்த தேவதை அந்த சாலையை கடக்கும்பொழுது குறிப்பிட்ட பகுதியை கடக்கும்பொழுது அப்பொழுது செல்லும் நபர்கள் விபத்தால் பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் விபத்து நடந்த பகுதிக்கு நான் சென்று பார்த்து இருக்கிறேன். விபத்து நடந்த பகுதிக்கு அருகில் அதன் சுற்றவட்டாரத்தில் ஒரு தேவதையின் நடமாட்டம் இருக்கின்றது.

எங்களின் ஊருக்கு அருகில் ஒரு இடம் இருக்கின்றது. அந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கும். அந்த பகுதியில் அருகில் எந்த தேவதையும் இல்லை ஆனால் அந்த பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் ஒரு ஆலமரம் இருக்கின்றது. அந்த ஆலமரத்தில் இருந்து ஒரு தேவதை நான் சொன்ன வழியாக செல்லுகிறது. 

பத்து கிலோ மீட்டர் அளவுக்கு அந்த தேவதை குறுக்காக சென்று வருகிறது. பத்து கிலோ மீட்டரில் இரண்டு சாலைகள் குறுக்கீடு இருக்கிறது. இரண்டு சாலையிலும் அது குறுக்கீடும் இடத்தில் விபத்து நடக்கிறது. 

ஒரே இடத்தில் தான் அது குறுக்கிடுகிறது. சரியாக அதே இடத்தில் பல விபத்துக்கள் நடந்து இருக்கிறது. பல உயிர்களை காவு வாங்கி இருக்கின்றது.

இதனை எல்லாம் நம்புவது கடினம் ஆனால் அது தான் உண்மை. நீங்கள் ஆன்மீக பயிற்சி செய்தால் இதனை ஒரு சோதனையாக செய்துப்பாருங்கள். நான் சொல்லுவது உண்மை என்று தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

4 comments:

nallur parames said...

Ithai thadukka mudiyuma anna?

Unknown said...

Sir ungala meet pananum unga numb kudunga pls

XBand-Consultancy said...

Anna

My grandma and grandfather give so much trouble to me

they irritate me
they stop me from doing my business
i need to remove them from my home

what i can do என் கண் முன்னே தோன்றி இமிசிகின்ரர்கள்

mano

Nadu Mutram - Veedu said...

Sir,
What should we do to protect ourselves while crossing such places?