Followers

Monday, May 18, 2015

பாதுகாப்பு


வணக்கம்!
          சதுரகிரியில் ஆற்று வெள்ளத்தில் விபத்து ஏற்பட்டு பலி என்று செய்தி சானலில் பார்த்தேன். காடுகளுக்கு உள்ளே இருக்கும் செல்லும் கோவிலுக்கு செல்லும்பொழுது தகுந்த பாதுகாப்போடு செல்லவேண்டும். அந்த காட்டைப்பற்றி நன்றாக தெரிந்து இருக்கவேண்டும்.

காடுகளுக்கு பயணம் செய்யும்பொழுது நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். காட்டில் நாம் கும்பிடபோகும் சக்தி என்பது ஒன்று அந்த காட்டை பாதுகாக்கும் சக்தி என்பது வேறு ஒன்றாக இருக்கும்.பாதுகாக்கும் சக்தியிடம் நாம் எச்சரிக்கையுடன் இருந்துக்கொள்ள பல பாதுகாக்கு நடவடிக்கை ஆன்மீகத்தில் இருக்கிறது அதனை பின்பற்றி செல்லவேண்டும்.

டிவி சேனலில் டிஸ்கவரி தொலைக்காட்சியை பார்த்தால் பல பாதுகாப்பு நடவடிக்கையைப்பற்றி சொல்லி தருவார்கள். அதனை பார்த்தாலே அவசர நேரத்தில் தப்பிக்க வழி சொல்லி தருவார்கள்.

ஆன்மீக பயணம் செல்லுவது எல்லாம் தகுந்த குருவின் ஆலோசனையின் படி செல்லவேண்டும். இளம் வயதில் பயணம் மேற்க்கொண்டால் நல்லது வயதான காலத்தில் ஆன்மீக பயணம் செல்லும்பொழுது உடல் ஒத்துழைக்காது. 

காடுகளுக்கு செல்லும்பொழுது அந்த காட்டை விட்டு எந்தளவுக்கு வேகமாக வெளியே வரவேண்டுமே அந்தளவுக்கு அவசரமாக நமது வேலையை முடித்துக்கொண்டு வந்துவிடவேண்டும். தகுந்த பாதுகாப்போடு பயணம் மேற்க்கொண்டு தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

தன் பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்று. ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்லும்பொழுது கடவுள்  காப்பாற்றுவார் என்று சொல்லிக்கொண்டு இருப்பதை விட உங்களுக்கு என்ன என்ன பாதுகாப்பு இருக்கின்றதோ அத்தனை பாதுகாப்பு நடவடிக்கையும் கையாண்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு