வணக்கம்!
நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் அனைவரும் என்னை தொடர்புக்கொண்டு என்ன சார் எங்களுக்கு புதிய பதிவைப்பற்றி எந்த ஒரு கருத்தையும் சொல்லமாட்டீர்கள் எங்களிடம் அந்தளவுக்கு பணம் இருந்தால் வந்து சேர்ந்துவிடுவோம் எங்களுக்கு ஏதாவது பணத்தை குறைத்து வாங்ககூடாது என்று கேட்கிறார்கள்.
நான் இந்த புதிய பதிவை ஆரம்பித்த நோக்கம் யாராவது ஒருவர் வந்தால் போதும் அவர்களுக்கு நான் கற்ற விசயத்தை கொடுத்துவிடலாம் என்று தான் ஆரம்பித்தேன். இன்று புதிய பதிவில் பத்து பேர் இருக்கின்றனர். இன்னும் பல பேர் அதில் இணைந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
ஜாதககதம்பம் எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து இன்று வரை நான் சொல்லுவது கண்டிப்பாக பணம் ஒருவருக்கு இருக்கவேண்டும் அப்பொழுது தான் அவர்கள் நினைப்பதை ஏன் ஆன்மீகத்தை கூட அடையமுடியும் என்று சொல்லி வந்து இருக்கிறேன்.
பல செல்வவளத்தை பற்றி பதிவில் சொல்லிருக்கிறேன். அதனை எல்லாம் நீங்கள் வாழ்வில் கடைபிடித்தாலே போதும் இன்று ஒரளவுக்கு பணம் வந்து இருக்கும். அதனையும் செய்வதில்லை இன்று பல பேர் பணம் என்றவுடன் என்னிடம் பணம் இல்லை மாதம் மாதம் கட்டுகிறேன் என்கிறீர்கள்.
நான் பல ஊர்களுக்கு சென்று வருகிறேன் அப்படி செல்லும்பொழுது அந்தந்த ஊர்களில் என்னை வந்து சந்தித்து இருக்கவேண்டும். அதுவும் செய்வதில்லை பின்பு எப்படி உங்களை நான் நம்பி இதில் இணைப்பது. படு பிஸியான ஆட்கள் கூட மாதத்திற்க்கு ஒரு முறை என்னை வந்து சந்தித்து செல்லுகின்றனர்.
உங்களுக்கு நான் சொல்லுவது ஒன்று தான் நான் பல ஊர்களுக்கு சென்று வருகிறேன். அந்தந்த ஊர்களின் என்னை சந்தித்து கேளுங்கள். நான் இலவசமாக சொல்லிதருகிறேன். பணம் கட்டினால் மட்டுமே புதிய பிளாக்கிற்க்கு இணைப்பு வழங்கமுடியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Naan kandippaaga sila varudangalil inaiven.
Post a Comment