வணக்கம்!
இன்று இருக்கின்ற ஆன்மீகம் அனைத்தும் முற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது தான் ஆனால் அனைத்து ஆன்மீகவாதிகளும் தானே இதனை கண்டுபிடித்தது போல் பெயர் போட்டுக்கொள்வார்கள்.
நான் சொல்லுகின்ற விசயங்கள் அனைத்தும் முற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முறைகளை வைத்து தான் சொல்லிக்கொண்டு வருகிறேன். எதுவும் என்னுடையவை அல்ல. இதனை நீங்கள் புரிந்துக்கொள்ளுங்கள்.
ஏற்கனவே இருக்கின்ற விசயத்தை நீங்கள் ஏன் மறுபடியும் சொல்லுகின்றீர்கள் என்று உங்களின் மனது கேட்கலாம். இந்த காலத்திற்க்கு தகுந்தமாதிரி மாற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
வழிநடத்தும் குருவின் கையில் தான் அனைத்தும் இருக்கின்றது. குரு கெட்டிக்காரன் என்றால் கற்கும் சிஷ்யனும் சிறந்து விளங்குவான்.ஏற்கனவே இருக்கும் யுக்தியை எனது வழியாக கற்கும்பொழுது எளிதில் நீங்கள் முன்னேறிவிடலாம்.
புதிய பதிவில் சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்டாலும் நான் உங்களை வழிநடத்துவதால் அதில் நீங்கள் எளிதில் கரை சேர்ந்துவிடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment