வணக்கம்!
ஒருவருக்கு நோயின் தன்மை அதிகரித்தால் அவர்க்கு செவ்வாய் கிரகத்தின் நிலையும் கொஞ்சம் பார்க்கவேண்டும். ஒரு சிலருக்கு செவ்வாய் கிரகம் பலவீனமாக இருந்தாலும் நோய் வந்துவிடுவது உண்டு.
தைரியம் இல்லை என்றால் ரோட்டில் சென்றுக்கொண்டு இருக்கும் நோயும் உங்களை பார்த்து பல் இளிக்கும். உங்களை தேடி நோய் வந்துவிடும். ஒரு மனிதனுக்கு நோய் வருவதற்க்கு மனமும் ஒரு காரணமாக இருக்கின்றது.
ஒரு சிலருக்கு இரத்தத்தை பார்த்தாலே மயங்கி கீழே விழுந்துவிடுவதும் உண்டு. இரத்தத்தை குறிக்கும் செவ்வாய் சரியில்லை என்றால் இப்படி நடைபெறுவது உண்டு.
போர்க்கிரகம் என்று சொல்லப்படும் கிரகம் செவ்வாய். தைரியத்தை கொடுக்ககூடிய கிரகம் வலுவாக இருந்தால் கை வெட்டுபட்டால் கூட பயம் இல்லாமல் இருப்பார்கள்.
ஒருவருக்கு நோய் வந்து அந்த நோயின் வலியை தாங்கிக்கொள்ளவேண்டும் என்றாலும் அவர்க்கு செவ்வாய் கிரகம் வலுவாக இருக்கவேண்டும். செவ்வாய்கிரகம் பலம் இல்லை என்றால் சின்ன நோய்க்கு கூட கதறி அழவைத்துவிடும்.
இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை திருப்பூர், கோபி மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment