வணக்கம்!
பரிகாரம் சம்பந்தமாக எழுதுவதை விட்டுவிட்டு நீதிபோதனை மாதிரி எழுதிக்கொண்டு இருக்கிறோமே என்று நினைத்தேன். சரியான ஒரு திசையில் தான் நம்மை அம்மன் வழி நடத்தும் என்று நினைத்து மறுபடியும் இதனை தருகிறேன.
பரிகாரம் நாம் செய்தாலும் நம்மை கொஞ்சம் மாற்றும் சில விசயங்களை நாம் செய்யும்பொழுது மட்டுமே நாம் முன்னேற்றம் என்ற பாதையில் செல்லமுடியும் என்பதை நான் உணர்ந்து தான் சுயபரிசோதனையாக ஒரு சில விசங்களை உங்களை செய்ய சொல்லுகிறேன்.
முதலில் நாம் மறைவுஸ்தானத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்த மறைவு ஸ்தானத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் மீதி இருக்கும் சுபஸ்தானங்கள் பலனை கொடுக்காது. மறைவுஸ்தானம் காட்டும் விசயத்தை குறைக்கவேண்டும் என்று சொல்லுகிறேன்.
முதலில் மூன்றாவது வீட்டிற்க்கு அதிகமுக்கியத்துவத்தை அதிகம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். எந்த விசயத்திலும் அடுத்தவர் நம்மை பார்த்து சிரிப்பார்கள் அல்லது பேசுவார்கள் என்று நினைக்காமல் துணிந்து அனைத்து கெட்ட நடவடிக்கையிலும் ஈடுபடுகிறோம். இதனை குறைக்கவேண்டும்.
இன்றைக்கு தொலைதொடர்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். எந்த நேரம் பார்த்தாலும் சம்பந்தமே இல்லாமல் போனில் பேசிக்கொண்டே இருக்கிறோம் அல்லவா. போனில் தான் முக்கால்வாசி நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறோம். இதுவும் மூன்றாவது வீட்டிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு செயல். இதனை கொஞ்சம் குறைத்தால் நல்லது.
என்ன நீங்கள் போன் பேசுவதில்லையா என்று கேட்கலாம். அவசியம் ஏற்பட்டால் ஒழிய வேறு எதற்க்கும் போன் பேசகூடாது என்று சொல்லுகிறேன். தேவையற்ற அரட்டை அடிப்பது கூடாது. அவசியமான விசயத்திற்க்கு உபயோகப்படுத்துலாம்.
அரட்டை அடித்தால் தான் காரியம் நடக்கிறது அதனால் தான் பேசுகிறேன் என்று சொல்லுபவர்கள் பேசலாம். போனில் தொடர்புக்கொள்வது மூன்றாவது காட்டும் ஒரு செயல். அதனை அதிகமாக பயன்படுத்தும்பொழுது நாம் அந்த வீட்டை சார்ந்து இருக்கிறோம் என்பது தான் கருத்து.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment