ஒருவருக்கு சனி ஆறாவது வீட்டில் இருந்து தசாவை நடத்தினால் அவர்க்கு நல்லது என்று சொல்லுவோம். சனி ஆறாவது வீட்டில் இருந்தால் அவர்க்கு கடனும் இருக்கும். பெரிய பணக்காரர்களாக இருந்தால் கூட வங்கியில் கடனை வாங்கி வைத்திருப்பார்கள்.
பெரும்பாலும் நம்முடைய வாழ்வில் நிறைய கஷ்டம் வருவதற்க்கு காரணம் மறைவு ஸ்தானம் பலப்படுவது. மறைவு ஸ்தான அதிபதி தசா நடப்பது ஒருவரின் வாழ்க்கைக்கு பெரிய பிரச்சினை கொடுத்துவிடும்.
மறைவு ஸ்தானம் தொடர்ந்து தசா நடக்கும்பொழுது அவர்கள் பெரியளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நான் அனுபவத்தில் நிறைய பார்த்து இருக்கிறேன். மறைவுஸ்தானம் கொடுக்கும் வாழ்க்கை பெரும்பாலும் எடுப்படாமல் சென்றுவிடும்.
அனைத்திலும் தோல்வியை சந்திக்கும் மனிதன் நிறைய பேர்கள் இருக்கின்றனர். அவர்களின் ஜாதகத்தை வாங்கி பார்த்தால் கண்டிப்பாக அவர்களுக்கு தொடர்ச்சியாக மறைவுஸ்தான அதிபதிகளின் தசா நடந்துவந்திருக்கும்.
அதிகமான கடனை தருவதும் இப்படிப்பட்ட மறைவுஸ்தான அதிபதியின் செயல் தான். சனி மற்றும் செவ்வாய் சேர்ந்து இருந்தால் கூட அவர்களும் கடனை அதிகளவில் வாங்கி வைத்துவிடுவார்கள். அதனாலேயே அதிக பிரச்சினையை சந்திக்க நேரிடும்.
உங்களின் ஜாதகத்தை முதலில் எடுத்துக்கொண்டு மேலே சொன்னபடி இருந்தால் நீங்கள் பரிகாரத்தில் பங்குக்கொள்ளலாம். உங்களின் ஜாதகத்தை என்னிடம் அனுப்பி இதற்கு ஆலோசனையும் பெற்றுக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment