வணக்கம்!
பரிகாரம் என்ற ஒன்றை ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் இந்த தளத்திற்க்கு வரும் அனைவரும் பயன்பெறவேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கம் மட்டுமே. இதில எந்த ஒரு வியாபாரநோக்கம் இல்லை. நான் பெரும்பாலும் சம்பாதிப்பது தொழில் செய்பவர்களுக்கு செய்துக்கொடுத்து அதன் வழியாக வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடக்கிறது.
இந்த தளம் ஒரு ஆதாரமாக இருப்பதால் இதில் இருந்து வரும் நண்பர்களுக்கு முடிந்தளவு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கம் இருந்ததை தற்பொழுது தான் அனைவருக்கும் அவர் அவர்களின் விருப்பதற்க்கு தகுந்தார்போல் செய்துக்கொடுத்து இருக்கிறேன்.
தொழில் செய்பவர்களை மட்டுமே வாடிக்கையாளர்களை வைத்துக்கொண்டு இருந்தேன். அதன் பிறகு இதில் உள்ளவர்களுக்கும் நல்லது செய்து அதன் வழியாக பல புண்ணியத்தை தேடினேன் என்று தான் சொல்லவேண்டும்.
பரிகாரம் மற்றும் ஆன்மீகபணிக்கு பணம் வாங்ககூடாது என்று சொன்னாலும் இதனை செய்வதற்க்கு எல்லாம் பணம் தேவைப்படுகின்றது. இதனை எல்லாம் தயார் செய்துவிட்டு அதன் பிறகு அறிவிப்பை வெளியிடுகிறேன்.
கட்டணத்தில் செய்ய நினைப்பவர்கள் அல்லது என்னால் இலவசத்தில் தான் பங்குபெறமுடியும் என்று நினைப்பவர்களுக்கும் பங்குபெறலாம். எந்த வித பாகுபாடும் இன்றி பரிகாரம் செய்யப்படும்.
பெரும்பாலும் ஒருவர் பரிகாரம் செய்ய போகிறார் என்றால் அவர் அவ்வளவு எளிதில் செல்லமாட்டார்கள். அவர்களின் கர்மா அதனை தடைசெய்யும். பரிகாரம் என்ற ஒன்றை அவர்களின் விருப்பத்திற்க்கு தகுந்தவாறு செய்யும்பொழுது அவர் அவர்களின் பணநிலை வைத்தே செய்ய முடியும் அப்படியே இல்லை என்றாலும் இலவசமாக செய்துக்கொண்டு ஒரு நல்லவாழ்க்கைக்கு மாறமுடியும் என்பதற்க்காக பரிகாரம் பரிந்துரை செய்கிறேன்.
தற்பொழுது சனிக்கிரகம் தனியாகவும் செவ்வாயகிரகத்திற்க்கு தனியாகவும் மற்றும் சனி செவ்வாய் சேர்ந்து இருந்தால் அவர்களுக்காகவும் பரிகாரம் செய்யப்படுகிறது. அதிகப்பட்சம் இதில் அனைவரும் கலந்துக்கொள்ளமுடியும். அதிகப்பட்சம் இந்த கிரகத்தின் பாதிப்பு இருப்பர்கள் இருப்பார்கள்.
உடனே உங்களின் ஜாதகத்தை மற்றும் கோரிக்கை வாட்ஸ்அப் நம்பரை அனுப்புங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment