வணக்கம்!
ஒன்றும் தெரியாத சோதிடர்களுக்கு கூட தெரியும் சோதிடத்தில் லக்கினத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு தான் அனைத்தையும் கவனிக்கவேண்டும் என்று புரியும். உங்களுக்கு எல்லாம் தெரியாதா என்ன
சோதிடத்தில் லக்கினம் அடிவாங்கினால் வாழ்க்கை நன்றாக இருக்காது என்பது தான் சோதிடவிதி. லக்கினம் அடிவாங்கினாலும் நன்றாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் வாழ்வில் நிறைய கஷ்டத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு வாழ்க்கையில் நன்றாக இருப்பார்கள்.
லக்கனம் நன்றாக இருப்பவர்கள் அவர்களின் தந்தை நன்றாக சம்பாதித்து வைத்திருப்பார்கள். தந்தை சம்பாதித்ததை நன்றாக செலவு செய்து அனுபவித்துக்கொண்டு இருப்பார்கள்.
உங்களின் லக்கனம் சரியில்லை என்றால் வாழ்க்கை உங்களுக்கு பாடத்தை கற்றுக்கொடுக்கும். போராட்டத்தை போட்டு வருவதால் அனைத்தையும் ஞானிபோல் எடுத்துக்கொள்வீர்கள்.
லக்கினம் சரியில்லை என்று வரும்பொழுது எதிலும் போராட்டம் மற்றும் அவமானம் வரும். இந்த அவமானத்தை நீங்கள் சகித்துக்கொண்டு வாழஆரம்பித்த பிறகு தான் நிலையான ஒரு வாழ்வு அமையும். சகித்துக்கொள்ளுங்கள் அது போதும் உங்களின் வளர்ச்சிக்கு.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment