வணக்கம்!
இன்று தொடர்மழை பெய்து வருகின்றது. மழை பெய்தால் பதிவு தருவதற்க்கு இங்கு நிறைய சிரமம் இருப்பதால் உங்களுக்கு காலையில் பதிவை தரமுடியவில்லை. தற்பொழும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது இருந்தாலும் கஷ்டப்பட்டு இந்த பதிவை தருகிறேன். நேற்று திருமணத்தைப்பற்றி பார்த்தோம். அதில் இருந்து ஒரு கருத்தை சொல்லவேண்டும் என்று இருந்தேன். அந்த கருத்து இது தான்.
எனக்கு தெரிந்த ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவர் என்னிடம் அவரின் பையனுக்கு திருமண வரம் பார்க்கவேண்டும் என்று நிறைய ஜாதகத்தை எடுத்துக்கொடுத்தார். ஒரு நல்ல ஜாதகமாக பார்த்து அந்த பையனுக்கு ஒரு பெண்ணின் ஜாதகத்தை பரிந்துரை செய்தேன்.
பெரிய பணக்காரர்கள் என்றாலே அவர்கள் அடுத்தவரை அலட்சியம் செய்து விடுவார்கள். அவர்கள் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்திற்க்கு என்று ஒரு வார்த்தை கூட எனக்கு சொல்லவில்லை. நானும் வேலை பளுவில் அதனை எல்லாம் மறந்துவிட்டேன்.
தற்பொழுது என்னை தொடர்புக்கொண்டு திருமணம் ஆன இருவருக்கும் பிரச்சினை என்று சொன்னார். ஜாதகத்தில் அப்படிப்பட்ட பிரச்சினை இல்லை என்றாலும் அவர்களின் திருமண சம்பந்தமாக ஒன்றை சொல்லவேண்டும். திருமணத்திற்க்கு திருமண மண்டபம் ஏற்பாடு செய்வதற்க்கு ஒரு வருடத்திற்க்கு முன்பே புக் செய்யவேண்டுமா. சென்னையில் பெரிய திருமண மண்டபம் எல்லாம் புக் செய்வதற்க்கு இந்த விதியாம்.
திருமண நாளை தேர்ந்தெடுக்கும்பொழுது ஒன்றை எல்லாேருக்கும் சொல்வோம். அதாவது திருமண நாள் குறிக்கும்பொழுது அந்த திருமண நாளில் பெண்களுக்கு மாதவிலக்கு இருக்ககூடாது என்பது ஒரு விதி.
நமது சடங்குங்கள் அனைத்தும் அக்னியில் செய்யப்படும். அந்த நாளில் பெண்கள் மாதவிலக்கோடு அக்னியின் முன்பு அமரகூடாது. திருமண மண்டபம் ஒரு வருடத்திற்க்கு முன்பு புக் செய்வதால் இதனை கணக்கீடு செய்யமுடியாது என்று விட்டுவிடுவார்கள். அதாவது பரவாயில்லை இருந்தால் இருக்கட்டும் என்று நினைக்கிறார்கள்.
பணக்காரர்கள் என்றால் அப்படிப்பட்ட திருமண மண்டபத்தை தேர்ந்தெடுத்து அதில் திருமணம் செய்தால் தான் ஒரு பணக்காரன் என்று நினைக்கிறார்கள். விளைவு திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
உங்களின் பணக்கார அந்தஸ்த்தை காட்டுவதற்க்கு இப்படிப்பட்ட வேலை தேவையில்லை. பெரிய இடத்தை பார்க்காமல் பெண்ணின் இந்த நாள் எது என்று பார்த்து அதனை தவிர்த்துவிட்டு திருமணத்திற்க்கு நாளை தேர்ந்தேடுத்தால் உங்களின் வாரிசுகளின் திருமண வாழ்வு நன்றாக இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment