வணக்கம்!
நேற்று எழுதிய கிரகங்கள் தரும் மாயை என்ற பதிவை பாராட்டினார்கள். அந்த பதிவு ஆன்மீக அனுபவங்கள் பகுதியில் இடம்பெறுவதற்க்காக எழுதிய ஒன்று. அதனை எல்லாேரும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்கு இதில் கொடுத்தேன்.
தற்பொழுது இளைஞர்கள் அதிகம் பேர் ஜாதகத்தை கையில் எடுத்து அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். ஒருவர் இளம்வயதில் ஜாதகத்தை எடுப்பது நல்லது என்று சொன்னாலும் ஒரு விதத்தில் தவறு என்று சொல்லலாம்.
ஒருவர் ஜாதகத்தை எடுத்து பார்க்கிறார் என்றால் அவர்க்கு நிறைய கஷ்டங்கள் இருக்கின்றன என்று அர்த்தம் கொள்ளவேண்டும். நான் சந்தித்த பலர் கஷ்டத்தில் தான் இருக்கின்றனர். அவர்களுக்கு வழிகாட்ட ஜாதகத்தை எடுத்து பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
நிறைய சோதனைகளை கொடுப்பது மறைவு ஸ்தான அதிபதிகளின் தசா தொடர்ச்சியாக வருவது தான். ஒரு மறைவுஸ்தான அதிபதியின் தசா வந்தாலே அவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடும். தொடர்ச்சியாக இரண்டு பெரிய தசா மறைவு ஸ்தானத்தில் இருந்து நடைபெற்று வந்தால் பிரச்சினை எப்படி இருக்கும் என்பதை பார்த்துக்கொள்ளவேண்டியது தான்.
இளைஞர்களுக்கு சொல்லுவது எல்லாம் தொடர்ச்சியாகவே திருமணத்திற்க்கு முன்பு கஷ்டமான தசா வந்தால் போராடுவதை விட்டுவிட்டு திருமணத்தை செய்துவிடுவது நல்லது.
திருமணத்தை செய்யும்பொழுது வரக்கூடிய அந்த பெண்ணின் ஜாதகத்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு மாற்றம் வரும் என்பது மட்டும் உண்மை. காசே இல்லே எப்படி திருமணம் செய்வது என்று கேட்கலாம். இந்தியாவில் காசை வைத்துக்கொண்டு தான் திருமணம் செய்யவேண்டும் என்றால் ஒரு பயலும் திருமணத்தை செய்யமுடியாது.
பாேராடி பார்த்துவிட்டு அதன் பிறகு திருமணத்தை செய்துக்கொள்ளலாம். போராடாமல் சென்று உடனே திருமணத்தை செய்யவேண்டாம். நிறைய கஷ்டப்பட்டு ஒன்றும் பலன் இல்லை என்றால் திருமணத்தை உடனே முடிப்பது நல்லது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment