வணக்கம்!
ஜாதகத்தை வைத்து ஒரு சில நேரங்களில் நாம் பலனை சொல்லமுடியாமல் இருப்போம். நாட்டின் நடப்பு எப்படி இருக்கின்றது என்பதை பார்த்துக்கொண்டு அதன்படியும் பலன் சொல்லவேண்டும்.
தற்பொழுது நிலம் வாங்கவேண்டும் என்று நினைத்து ஜாதகம் பார்க்க வருகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் ஜாதகத்தை வைத்து தற்பொழுது சொல்லமுடியாது. பணப்பிரச்சினை மற்றும் கோர்ட் நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் தொழில் கீழே கிடக்கும்பொழுது நாம் எப்படி ஒருத்தரின் ஜாதகத்தை பார்த்து நிலம் வாங்கலாம் என்று சொல்லமுடியும்.
ஒரு சில நேரங்களில் நாம் ஒருத்தருக்கு பரிகாரம் செய்வோம் அவர்கள் பரிகாரம் செய்துவிட்டார்கள் இனிமேல் தானாகவே நடக்கும் என்று ஒக்கார்ந்து இருக்ககூடாது. நம்முடைய வேலையும் பரிகாரமும் ஒன்றாக இணையும்பொழுது தான் வெற்றி கிடைக்கும்.
மந்திரம் கால் மதி முக்கால் பங்கு என்று சொல்லுவார்கள். மந்திரம் செய்தால் கூட நம்முடைய வேலை முக்கால் பங்கு செய்யும்பொழுது நம்முடைய காரியம் வெற்றியை தரும்.
இதனை எல்லாம் புரிந்துக்கொண்டு நாம் செயல்படவேண்டும். ஜாதகத்தை மட்டும் வைத்து எல்லாம் கிடையாது. நம்முடைய பங்களிப்பு எப்படி இருக்கின்றது என்பதை பொறுத்து நடைபெறும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment