வணக்கம்!
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சனி இணைந்து எட்டாவது வீட்டில் இருந்தால் அவர்க்கு அதிகப்பட்சம் உலகத்தில் உள்ள அவமானம் மற்றும் சண்டையால் அடிப்படுவது எல்லாம் நடக்கும்.
ஒரு சிலருக்கு இது நன்றாகவும் இருக்கும். பெரியளவில் சாதிப்பவர்களுக்கு இந்த அமைப்பு நன்றாகவும் வேலை செய்கிறது. ஒரு சிலருக்கு உழைக்காமல் தன்னுடைய வாழ்க்கையை பிறர் வழியாக ஓட்டிக்கொள்வதற்க்கு வசதியை ஏற்படுத்திக்கொடுப்பதும் உண்டு.
சனி செவ்வாய் எட்டில் இருந்தால் ஒரு சிலர் திருமணம் ஆனவுடன் அவர்களின் மாமனார் வீட்டில் இருந்து பணவசதியை பெற்று வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.
வெளியில் இருந்து உழைக்காமல் பணம் வருகின்றது என்பதால் ஊதாரியாக பணத்தை செலவு செய்து வைத்திருக்கின்ற பணத்தை இழக்க வைக்கும் அதனை மட்டும் சரிசெய்தால் போதும் வாழ்க்கையை அப்படியே ஓட்டிக்கொண்டு இருக்கலாம்.
இருகிரகங்களும் எட்டில் இருக்கும்பொழுது வாழ்க்கையில் அதிகப்படியான ஒரு வெறுப்பை அவர்களுக்கு தரும். பெரும்பாலும் இல்லறவாழ்க்கை நன்றாக இருக்காது. அதிகபடியான சந்சியாசி வாழ்வை கொடுக்கும்.
செவ்வாய் சனி இணைந்து எட்டில் இருந்தால் அவர்கள் வாழ்க்கை சரியில்லை என்றாலும் ஒரு சிலருக்கு நன்றாக இருந்தாலும் இந்த பரிகாரத்தில் பங்குபெறலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment