வணக்கம்!
மூளையை வைத்து செயல்படும் மனிதனுக்கு ஆயுள் குறைவு. உழைக்கும் மனிதனுக்கு ஆயுள் அதிகம். சாப்ட்வேர் துறையில் இருந்துக்கொண்டு ஒரு கம்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துக்கொண்டு இருக்கும் மனிதனுக்கு ஆயுள் மிக மிக குறைவு.
எனக்கு அறிவியல் எல்லாம் தெரியாது ஆனால் கிரகங்களின் தன்மை அது கொடுக்கும் பலன் மற்றும் நமது அனுபவம் இதனை வைத்து தான் நான் சொல்லுகிறேன்.
உடல் உழைப்பை போட்டு உழைக்கும் ஆட்கள் அதிக நாட்கள் இருக்கின்றார்கள் என்பது மட்டும் உண்மை. உடலில் எந்தவித நோயும் வராது அதனால் அவர்களுக்கு ஆயுள் அதிகம் என்று நான் சொல்லவில்லை.
உடல் உழைப்பு இருக்கும் மனிதனுக்கும் நோய் இருக்கின்றது. எத்தனையோ ஏழைகள் நல்ல உழைத்துக்கொண்டு இருந்தாலும் பாதிவயதில் இறக்கின்றனர்.
கிரகங்களின் பலனை வைத்து நான் இதனை சொல்லுகிறேன். நீங்கள் வாரம் முழுவதும் கம்யூட்டர் முன்னாடி அமர்ந்து வேலை பார்த்தாலும் கிடைக்கும் ஒரு நாளில் நன்றாக வெயிலில் உழையுங்கள்.
நாங்க உழைப்பதற்க்கு வேலை இல்லை என்று சொல்லவேண்டாம். அதனை நீங்களே உருவாக்கி வேலை செய்யுங்கள். உங்களின் நலன் கருதி அதனை செய்யுங்கள்.
வெயிலில் போவது எனக்கு பிடிக்காது நான் ஏசியிலேயே தான் பிறந்து வாழ்ந்து வருகிறேன் என்று சொல்லவேண்டாம். கடைசியில் நெருப்புக்கு தான் இந்த உடல் செல்லுகின்றது என்பது மட்டும் உண்மை என்பதை புரிந்தால் ஆறு நாட்கள் உட்கார்ந்து வேலை செய்தாலும் ஒரு நாள் வெளியில் சென்று வேலை செய்வீர்கள்.
கோயம்புத்தூர் திருப்பூர் மற்றும் கோபி சேர்ந்த நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment