வணக்கம்!
சனிக்கிரகம் மற்றும் செவ்வாய் கிரகம் இரண்டும் சேர்ந்து மூன்றாவது வீட்டில் இருந்தால் அவர்கள் தைரியத்தோடு இருப்பார்கள். எந்த காரியத்திலும் வெற்றி பெற்றுவிடுவார்கள். எங்கு சென்றாலும் தனி ஆளாக நின்று ஜெயித்துவிடுவார்கள்.
சனி செவ்வாய் மூன்றாவது வீட்டில் இருந்தால் அடுத்தவர்களோடு ஒத்து செல்லமாட்டார்கள். வீண் பிடிவாதம் பிடித்துக்கொண்டு அவர்களுக்கு நடைபெறும் நல்லதை கூட எனக்கு உன்னால் வேண்டாம் என்று சொல்லுவார்கள்.
சனி செவ்வாய் சேர்ந்து இருப்பது திருமணத்தை தள்ளிபோடவும் வைக்கின்றது. பல பேர்களை நான் கவனித்து பார்த்து இருக்கிறேன். அவர்களின் திருமணம் ஏதோ காரணத்திற்க்காக தள்ளி சென்றுக்கொண்டு இருக்கின்றது.
சனி செவ்வாய் சேர்ந்து இருக்கும்பொழுது ஒரு சில காலத்தில் வெளி தொடர்பு இல்லாமல் தனிமை வாழ்வையும் உருவாக்கிவிடுவது உண்டு. அடுத்தவர்களோடு சண்டை சச்சரவோடு வாழ்வை தனிமையாகவும் செல்ல வைக்கும்.
பெண்களின் ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்ந்து மூன்றில் இருப்பது அதிக பிரச்சினையை உருவாக்கி வைக்கும். பெண்களின் ஜாதகத்தில் மறைவிடம் அதிக பலன் பெறுவது தவறு. பெண்களின் ஜாதகத்தில் அப்படி பலன் பெற்றால் அவர்களின் வாழ்வு இல்லறத்திற்க்கு ஏற்றார்போல் இருக்காது.
சனி செவ்வாய் பரிகாரத்திற்க்கு தங்களின் ஜாதகத்தை அனுப்பி கோரிக்கை மற்றும் வாட்ஸ்அப் நம்பரையும் இணைத்து அனுப்புங்கள்.
சனி செவ்வாய் பரிகாரத்திற்க்கு தங்களின் ஜாதகத்தை அனுப்பி கோரிக்கை மற்றும் வாட்ஸ்அப் நம்பரையும் இணைத்து அனுப்புங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment