Followers

Thursday, January 5, 2017

சனிபெயர்ச்சி


வணக்கம்!
          நேற்று ஒரு நண்பர் பேசும்பொழுது என்னிடம் சார் சனிபெயர்ச்சி தற்பொழுது நடைபெறுகிறது என்று சொல்லுகின்றனர். இது உண்மையா என்று கேட்டார்.

திருக்கணிதப்படி தற்பொழுது சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது என்று சொல்லுகின்றனர். சனிப்பெயர்ச்சி நடந்துபோல அனுபவத்தில் ஒன்றும் தெரியவில்லை. சனிப்பெயர்ச்சி நடப்பதற்க்கு முன்பு நிறைய நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு இப்படிப்பட்ட பிரச்சினை வந்திருக்கிறது என்று புதிய புதிய பிரச்சினைப்பற்றி சொல்லுவார்கள்.

சனிப்பெயர்ச்சி நடைபெறுவதற்க்கும் குறைந்தது மூன்று மாதத்திற்க்கு முன்பே என்னை நிறைய பேர் தொடர்புக்கொள்வார்கள் ஆனால் தற்பொழுது அப்படி ஒன்றும் சொல்லவில்லை.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் விசேச பூஜைகள் எல்லாம் நடைபெறும். ஊரில் உள்ள அனைத்து கோவில்களிலும் விஷேசமாக இருக்கும். பட்டிதொட்டி எல்லாம் பட்டையை கிளப்பும் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை.

கோவில்களில் எப்பொழுது நடைபெறுகிறதோ அப்பொழுது நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதுவரை பொறுமையாக இருங்கள். மனதைப்போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: