Followers

Saturday, April 7, 2018

சிறப்பு பதிவு 8


ணக்கம்!
          ஒரு நல்லநாளில் சுபமுகூர்த்த வேளையில் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் எல்லாம் வைப்பார்கள். சுபநிகழ்ச்சி என்பன எதுவெல்லாம் நல்லது என்று மக்கள் நினைக்கின்றார்களோ அதனை எல்லாம் சுபநிகழ்ச்சிகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஒரு சுபநிகழ்ச்சிக்கு நீங்கள் ஒரு நாளை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று வைத்துக்காெள்வோம். சுபநிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்த நாளில் எந்த லக்கினத்தில் வைப்பது என்பதை தேர்ந்தெடுப்பார்கள். அந்த நேரத்தில் நல்ல நேரத்தையும் கணித்து அதில் சுபநிகழ்ச்சியை நடத்தலாம் என்பார்கள். பொதுவாக ஒரு சுபமுகூர்த்த நாளில் காலையில் ஏதாவது ஒரு லக்கினம் வந்தால் அந்த லக்கினத்தை வைத்துவிடுவார்கள். நல்ல நேரம் வரும் நேரத்தில் உள்ள லக்கனத்தை தேர்ந்தெடுத்து வைத்துவிடுவார்கள்.

நமது முன்னோர்கள் எது பிறப்பை எடுக்கின்றதோ அதனை லக்கினமாக கருதி அது வளர்ச்சி அடையும் என்பதால் லக்கினத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றனர். ஒரு மனிதன் பிறந்தாலும் அவனுக்கு லக்கனம் முக்கியமாக இருக்கின்றது. பிறப்போடு சுபமுகூர்த்தத்தை வைத்திருக்கிறார்கள். மனிதன் பிறப்பு போல் நாம் செய்கின்ற நல்ல நிகழ்ச்சியும் வளர்ச்சியை நோக்கி செல்லட்டும் என்று முடிவு செய்வார்கள்.

ஒரு திருமண அழைப்பிதழை கொடுக்கிறேன்.

நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் தை மாதம் 29 ஆம் தேதி(11-02-2018) ஞாயிற்றுகிழமை மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை மணி 10.30 க்கு மேல் 11.30 க்குள் மீன லக்னத்தில்

என்று குறிப்பிட்டு நேரத்தை சுட்டிக்காட்டுவார்கள்.

ஒரு திருமண பத்திரிக்கையை பார்த்து மேலே சொன்ன விசயத்தை சொல்லிருக்கிறேன். கொஞ்சம் மாறுதல்கள் இருக்கலாம் ஆனால் அந்த குறிப்பிட்ட லக்கனத்தை குறிப்பிடாமல் செய்யமாட்டார்கள். லக்கினம் மிக மிக முக்கியமாக கருதப்படும். இவர்களின் வாழ்க்கையை அந்த லக்கனம் முடிவு செய்யும் என்று நமது சோதிடத்தை கண்டுபிடித்தவர்கள் சொல்லிவிட்டு சென்று இருக்கின்றனர்.

சுபநிகழ்ச்சிக்கு குறிக்கும் லக்கனம் அனைவருக்கும் நல்ல லக்கனமாக இருக்குமா என்றால் கண்டிப்பாக அது ஒத்துவராது என்றே சொல்லலாம். மாப்பிள்ளைக்கு குறிப்பிட்ட லக்கனம் அஷ்டமாதிபதியாக வந்தால் அது அவர்களின் திருமண வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும். பெண்ணிற்க்கும் அந்த லக்கனம் சரியில்லை என்றாலும் குந்தகம் விளைவிக்கும். இரண்டு பேரின் ஜாதகத்தையும் ஆராய்ந்து அதன் பிறகு முகூர்த்தத்தை வைக்கலாம்.

நீங்கள் நினைப்பது புரிகிறது. இரண்டு பேருக்கும் நல்ல லக்கனம் எப்பொழுது வருவது அந்த நாளிலில் திருமண மண்டபம் கிடைக்குமா என்று கேட்கலாம். உங்களுக்காக வாழ்ந்தால் இதனைப்பற்றி கவலைப்படாமல் சுபமுகூர்த்தத்தைப்பற்றி தேடுவீர்கள். ஊருக்கு வாழ்கின்றவர்கள் இதனைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்.

மாப்பிள்ளை பெண்ணிற்க்கும் சுபமுகூர்த்த லக்கனம் மிகவும் நல்லதை செய்கின்ற நிலையில் இருக்கும் லக்கனத்தை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். சோதிடவிதிகளை கணக்கில் கொண்டு ஒரு நல்ல லக்கனத்தை தேர்ந்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. 

நான் சோதிடம் பார்க்க ஆரம்பித்த காலத்தில் பொருத்தம் பார்க்க பெண்ணின் சடங்காகி நின்ற ஜாதகத்தை தான் மக்கள் கொடுத்து பார்க்க சொல்லுவார்கள். தற்பொழுது பிறந்த நாளை வைத்து பார்க்க சொல்லுகின்றனர். ஏன் சடங்குக்கு வந்ததை வைத்து பார்க்க சொல்லிருக்கின்றனர் என்றால் பெண்களுக்கு அதிகப்பட்ச கடமை பெண் குழந்தையை பெற்றெடுப்பதில் தான் இருக்கின்றது. வயது வந்த நாள் என்பது கருப்பை வளர்ச்சியை ஆரம்பிப்பது என்பதை ஒரு ஆரம்பமாக அந்த காலத்தில் வைத்திருக்கின்றனர்.

ஒரு லக்கனம் ஒரு சுபநிகழ்ச்சியை நல்ல நிலைக்கு கொண்டு செல்லுமா என்று கேட்கலாம். கண்டிப்பாக ஒரு சிறந்தமுறையில் கணிக்கப்பட்ட லக்கனம் நல்ல நிலைக்கு கொண்டு சென்று அதனை பல ஆண்டுகள் நிலைக்க வைக்கும்.

ஒரு கோவில் கட்டுகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். கோவில் கட்ட ஆரம்பிக்கும்பொழுதும் மற்றும் கும்பாபிஷேகம் செய்யும்பொழுதும் அதற்கு லக்கனத்தை குறிப்பார்கள். நம்ம நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேல் நிற்க்கும் கோவில்கள் இருக்கின்றனவா அல்லவா.

ஆயிரம் வருடங்களுக்கு மேல் கோவில் நிற்க்கின்றது என்றால் அந்த கோவிலை கட்ட லக்கனம் குறித்துக்காெடுத்து சோதிடர்களின் திறமையை எப்படி நாம் பாராட்டுவது. சோதிடர்களின் கணிப்பு எப்படிப்பட்டது மற்றும் லக்கனம் எப்படி வேலை செய்கின்றது என்பதை நீங்கள் இதன் வழியாகவே தெரிந்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு நிகழ்வையும் மிகச்சரியாக திட்டுமிட்டு சொல்லும் சோதிடம் நம்மிடம் இருக்கின்றது. அதனை சரியாக பயன்படுத்துவது மட்டுமே நாம் செய்யும் வேலையாக இருக்கும். சோம்பேறிதனம் பார்க்காமல் நல்ல சிந்தனை செய்து ஒரு நிகழ்வை நாம் சோதிடத்தின் வழியாக திட்டமிட்டால் செய்கின்ற அனைத்தும் வெற்றியை தந்துவிடும்.

பல விசயங்கள் மற்றும் மேற்கோள்களை வைத்து நாம் எப்படி அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை எல்லாம் நமது கட்டண பதிவில் பார்க்க போகின்றோம். உடனே அனைவரும் அதில் இணைந்துக்கொள்ளுங்கள். நீங்கள் செலுத்தும் பணம் கண்டிப்பாக உங்களுக்கு பலவிதத்திலும் பயன்படும்விதத்தில்  இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: