Followers

Saturday, April 28, 2018

அன்னதானம்


வணக்கம்!
          திருப்பூரில் நண்பர் மெய்யழகன் கேட்ட கேள்வியை அடிப்படையாக கொண்டு இந்த பதிவை தருகிறேன். தொடர்ச்சியாக அவர் கேட்ட கேள்விகளுக்கு தொடர்ந்து பதிவை தருகிறேன். அன்னதானத்தைப்பற்றி ஒரு கேள்வி வந்தது.

நமது நண்பர்களிடம் சந்திக்கும்பொழுது சொல்லும் விசயம். அன்னதானம் எங்கும் சாப்பிட்டுவிடாதீர்கள். அன்னதானம் என்பது அடுத்தவர்களின் கர்மாவை நீக்க செய்கின்றனர். அன்னதானத்தை நாம் சாப்பிட்டு அதனை ஏற்றிக்கொள்ள வேண்டாம்.

அன்னதானம் தயாரித்து அந்த அன்னதானத்தை கோவிலில் உள்ள சாமிக்கு முன்னாடி வைத்து தீபாராதனை செய்து அதனை நீங்கள் சாப்பிட்டால் நல்லது. தற்பொழுது வரும் அன்னதானம் அனைத்தும் வெளியில் இருந்து சமைக்கப்பட்டு அதனை  மக்களுக்கு கொடுக்கின்றனர். இதனை நீங்கள் சாப்பிடவேண்டாம்.

குலதெய்வத்தில் செய்யும் அன்னதானம் பெரும்பாலும் சாமிக்கு முன்பு படைக்கப்பட்டு அதனை கொடுப்பார்கள். அதனை அனைவரும் சாப்பிடலாம். பெரும்பாலும் நகர்புறத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் வெளியில் இருந்து உணவை தயார்செய்து கொடுப்பதால் அதனை நீங்கள் சாப்பிடவேண்டாம். 

எந்த கோவிலில் அன்னதானம் செய்தாலும் பொது இடங்களில் அன்னதானம் செய்தாலும் நீங்கள் அதனை சாப்பிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். பிரதோஷ காலங்களில் சிவன் கோவிலில் போடும் அன்னதானத்தை சாப்பிடகூடாது. இனிமேல் அனைவரும் இதனை பின்பற்றி வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: