Followers

Sunday, April 29, 2018

சூரியன்


வணக்கம்!
          இன்று சித்ரா பெளர்ணமி எங்கள் பகுதியில் வீட்டின் வாசலில் பொங்கல் வைத்து படைப்பார்கள். தைமாத பொங்கலுக்கு பயன்படுத்திய பொங்கல் வைக்கும் மண்கட்டிகளை வைத்து இந்த பொங்கலையும் வைப்பார்கள். பெரும்பாலும் இந்த பொங்கல் வைக்கும் பழக்கம் ஒரு சில பகுதியில் மட்டுமே இருக்கின்றது.

ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் என்னை சந்திக்க வந்திருந்தார். அவரின் நட்பு நீண்ட வருடமாக எனக்கு இருக்கின்றது. அவர் பல வருடங்களாக அரசாங்க வேலையில் பணிபுரியவேண்டும் என்று முயற்சி செய்துக்கொண்டு இருக்கின்றார்.

அரசாங்க வேலைக்கு அவர் முயற்சித்து பல தோல்விகளை கண்டு இருக்கின்றார். கடைசி நேரத்தில் கூட அவர்க்கு வரும் வாய்ப்பு சென்று அடுத்தவர்க்கு போய் இருக்கின்றது. எதனால் எனக்கு அரசாங்க வேலை கிடைக்கமாட்டேன்கிறது என்று என்னிடம் கேட்டார்.

அவரின் ஜாதகத்தை என்னிடம் கொடுத்தார். சிம்ம ராசி அவரின் இராசி. சிம்மராசி என்றாலே அரசாங்க வேலைக்கு போவதற்க்கு அதிகபட்சம் வாய்ப்பு அமைந்துவிடும். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு சிம்மராசியாக இருக்கின்றது நான் சொல்லுவது அதிகபட்ச கணக்கை மட்டும் வைத்து சொல்லுகிறேன்.

உங்களை சுற்றி வளைக்காமல் அவரின் ஜாதகத்தில் சூரியன் எங்கு சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை பார்த்தேன். லக்கனத்தில் இருந்து ஏழாவது வீட்டில் சூரியன் இருக்கின்றது. சூரியன் அவர்க்கு நல்லதை தான் செய்யவேண்டும் அதனை செய்கிறது ஆனால் அதனை தடைசெய்வது ஏதோ ஒன்று இருக்கின்றது.

நான் சூரியனை வைத்து மட்டும் பார்த்தேன். அனுஷம் நட்சத்திரத்தில் சூரியன் நிற்கிறது. அனுஷம் சனியின் நட்சத்திரம். சனியின் நட்சத்திரத்தில் சூரியன் செல்வதால் சனி தடை செய்கிறது என்பது என்னுடைய கணிப்பு.

நம்முடைய ஜாதகத்தில் காரத்துவத்திற்க்கு உரிய கிரகத்தை எடுத்து அது எந்த நட்சத்திரத்தில் செல்கிறது என்பதை பார்த்து அந்த கிரகத்திற்க்கும் நட்சத்திரஅதிபதிக்கும் என்ன தொடர்பு என்பதை பார்த்து பலன் சொன்னாலும் சரியாகவே வரும்.

சூரியனுக்கு சனியின் தொடர்பு ஏற்பட்டால் அரசாங்க வழியில் தடைகளை ஏற்படுத்தும். நிறைய போராடி அதனை வெல்லவேண்டும். அவர்க்கு ஒரு பரிகாரத்தை பரிந்துரை செய்து இருக்கிறேன்.

நண்பர்களே பல அற்புதமான மறைமுகமான நல்ல தகவல்கள் மற்றும் பரிகாரங்கள் சோதிடத்தைப்பற்றி நிறைய விசயங்களை நமது கட்டண பதிவில் தந்துக்கொண்டு இருக்கின்றேன். உடனே இணைந்துக்கொள்ளுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: