Followers

Sunday, June 10, 2018

தெய்வ குற்றம்


ணக்கம்!
         தெய்வகுற்றம் என்பதைப்பற்றி பார்க்கலாம். ஏதாவது ஒரு கோவிலுக்கு நாம் செய்யவேண்டியதை செய்யாமல் விட்டுவிட்டால் அல்லது ஒரு கோவிலுக்கு எதிராக நாம் களம் இறங்கி அந்த கோவிலை கட்டவிடாமல் தடுத்தால் கோவில் திருவிழாக்களை நடத்த விடாமல் செய்தால் தெய்வ குற்றம் ஒரு குடும்பத்திற்க்கு ஏற்படும்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு காரணங்களை சாஸ்திரங்கள் விவரித்து சொல்லுகின்றன. சோதிடத்தில் உள்ள தோஷங்கள் மற்றும் நடைமுறையில் ஒருவருக்கு நடக்கும் விசயத்தை நம்முடைய அனுபவத்தோடு வைத்து வரும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லுவது உண்டு.

ஒரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய் வந்தால் அவர்களுக்கு தெய்வ குற்றம் இருக்கின்றது என்று அர்த்தம். மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லும் நிலைமை ஏற்படும். ஒரு சிலருக்கு என்ன நோய் என்றே தெரியாமல் அதற்கு மருத்துவம் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். இதற்கு எல்லாம் தெய்வகுற்றம் இருக்கின்றது என்று அர்த்தம்.

தெய்வகுற்றம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வந்தாலும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு ஒருவர் மருத்துவமனையிலேயே இருக்கின்றார் என்றால் அவர்க்கு தெய்வகுற்றம் இருக்கின்றது என்று அர்த்தம். ஒரே நோய்க்கு தொடர்ச்சியாக ஆண்டு கணக்கில் மருத்துவம் பார்த்து வந்தாலும் அதுவும் தெய்வ குற்றம் என்று தான் அர்த்தம்.

ஒரு சிலர் கோவிலுக்கு செல்லாமலே இருப்பார்கள் அவர்களுக்கு கூட இப்படிப்பட்ட தோஷம் எல்லாம் வருவதற்க்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட ஜாதகர்களை நான் நிறைய பார்த்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: