Followers

Wednesday, June 20, 2018

பூஜைக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்


ணக்கம்!
          பூஜைக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் என்பது மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும். சுத்தமான எண்ணெய்களை வாங்கி அதனை பூஜைக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். விளக்கு தான் எண்ணெய் போடுகிறோம் இதில் என்ன இருக்கின்றது என்பதற்க்காக கண்ட கண்ட எண்ணெய் எல்லாம் போடவேண்டாம்.

கடைகளில் தீப எண்ணெய் விற்க்கும் இதனை வாங்கி வந்து அதனை பல வீடுகளில் மற்றும் கோவில்களில் தீபம் போடுகின்றனர். இந்த எண்ணெய் சுத்தமான எண்ணெய் கிடையாது. உங்களின் வீட்டில் சமையலுக்கு நீங்கள் எப்படிப்பட்ட நல்ல எண்ணெய் வாங்கின்றீர்களோ அந்த எண்ணெய்யை வாங்கி பயன்படுத்துங்கள்.

விளக்கு போடுவதற்க்கு தானே பயன்படுத்திக்கிறோம் என்று பல எண்ணெய்களை கூட்டு சேர்த்து தயாரித்து அதனை விற்கின்றனர். இது எண்ணெய்களின் கடைசி கட்டத்தில் உள்ள எண்ணெய்யாக இருக்கும். இதனையும் போடுவது தவறான ஒன்று.

பெரும்பாலும் நீங்கள் கோவிலில் விளக்கு வாங்கி போடும்பொழுது பூஜை கடையில் வைத்திருப்பவர்கள் ஏதோ ஒரு மட்டமான எண்ணெய் தான் உபயோகப்படுத்துவார்கள். நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு செல்லும் எண்ணெய்யை முடிந்தவரை பயன்படுத்த பாருங்கள். கடையில் தான் வாங்கி போடவேண்டும் என்றால் போடுங்கள். அந்த நேரத்தில் நம்மால் முடியாத காரணத்தால் தான் செய்கிறோம் என்பது கடவுளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது. அது தவறு இல்லை.

உங்களின் வீட்டில் நமக்கு சமைப்பதற்க்கு எந்த எண்ணெய் வாங்கி பயன்படுத்துகிறோமோ அதனையே நீங்கள் காேவிலுக்கும் மற்றும் பூஜைக்குக்கும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். தற்பொழுது பெரும்பாலும் கிராமபுறங்களில் செக்கில் ஆட்டி அந்த எண்ணெய்யை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதனையே கோவிலுக்கும் மற்றும் தினசரி வீட்டில் பூஜைக்கும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

விரைவில் சென்னைக்கு வருகிறேன். சென்னையில் என்னை சந்திக்கவிரும்பும் நண்பர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: