Followers

Saturday, June 16, 2018

சுயமுன்னேற்றம்


வணக்கம்!
          இன்றைய காலத்தில் ஒருவர் அதிகம் சொல்லும் வார்த்தை நான் பிஸியாக இருக்கின்றேன் என்று சொல்லுவார்கள். பிஸியாக ஒருவர் இருக்கின்றேன் என்று சொன்னால் அவர் உண்மையில் சும்மா தான் இருப்பார்.

என்னை பொறுத்தவரை பிஸியாக என்னை காட்டிக்கொள்வது கிடையாது. நான் பிரியாக வைத்துக்கொள்ள அதிகம் விரும்புவேன். எவ்வளவு பெரிய வேலை நடந்துக்கொண்டு இருந்தாலும் அதனை எல்லாம் வெளியில் காட்டிக்கொண்டு பிஸியாக இருக்கிறேன் என்று சொல்லுவது கிடையாது.

நான் வாகனங்களை இயக்கும்பொழுது மட்டுமே போனை எடுப்பதில்லை. பூஜை நேரத்திலும் போனை எடுப்பதில்லை மற்றபடி எந்த நேரத்திலும் போனை எடுத்து பேசிவிடுவேன். பிஸி என்ற வார்த்தையை பயன்படுத்துவது கிடையாது.

உங்களுக்கு வருகின்ற வாய்ப்பை நீங்களே உதறிதள்ளுவதற்க்கு உள்ள ஒரு சொல் பிஸி என்ற வார்த்தையை பயன்படுத்தவது தான். நீங்கள் பிஸி என்ற வார்த்தையை பயன்படுத்தும்பொழுது நன்றாக தொழில் செய்யும் நபர் உங்களிடம் தொழில் செய்ய யோசிப்பார். இவரே பிஸியாக இருக்கின்றார் நாம் ஏன் இவரோடு தொழில் செய்யவேண்டும் வேறு நபரை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துவிடுவார்.

இந்த உலகம் உங்களுக்கு வாய்ப்பை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் உங்களை எப்பொழுதும் பிரியாகவே வைத்துக்கொள்ளவேண்டும். உங்களுக்கு வருகின்ற வேலையை அவ்வப்பொழுது முடித்துக்கொள்ளவேண்டும். வேலையை முடித்துவிட்டால் அடுத்தடுத்து உங்களுக்கு வாய்ப்பை உலகம் கொடுத்துக்கொண்டே இருக்கும். 

இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: