Followers

Saturday, June 23, 2018

பாக்கியஸ்தானம்


வணக்கம்!
          ஒரு மனிதன் அவன் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை நோக்கி சென்றால் அவன் மிகப்பெரிய வெற்றியாளனாக இருப்பான். எடுத்து காரியங்கள் அனைத்தும் வெற்றி என்பது அவ்வளவு எளிதில் யாருக்கும் அமைவதில்லை.

ஒரு சிலருக்கு வெற்றியை எளிதில் பெற்றுவிடுவார்கள். பலர் வெற்றி என்றால் என்ன என்று கேட்கும் அளவில் இருப்பார்கள். ஒரு சிலர் விடாத முயற்சியை எடுத்துக்கொண்டே இருப்பார்கள் ஆனால் அவர்களால் ஒரு காரியத்தை கூட சாதிக்கமுடியாது.

ஒரு சிலர் இருக்கின்றனர். வேலை எல்லாம் கிடைக்கும் அந்த வேலையும் செய்வார்கள் ஆனால் அந்த வேலைக்கு தகுந்த ஊதியம் என்பது கிடைக்காமலே இருக்கும். இது அனைத்திற்க்கும் காரணமாக இருப்பது பாக்கியம் இல்லை என்பது மட்டுமே.

ஒருவரின் வெற்றிக்கு காரணமாக இருப்பது அவர்களின் பாக்கியஸ்தானம் ஆகும். பாக்கியஸ்தானம் மட்டும் நன்றாக இருந்தால் அவர்கள் எடுக்கும் காரியம் நன்றாக சென்று வெற்றி கிட்டும்.

நம்மில் பலருக்கு பாக்கியஸ்தானம் நன்றாக இருப்பதில்லை. உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக்கொண்டு உருண்டாலும் அவர்களுக்கு ஒட்டுகின்ற மண் தான் ஒட்டும் அனைத்து மண்ணும் ஒட்டாது என்பார்கள்.

ஒவ்வொருவருக்கும் பாக்கியம் என்பது நன்றாக இருக்க அவர்கள் செய்யும் தர்ம காரியம் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளை நடத்த உதவி செய்வது. பாக்கியஸ்தானத்தில் உள்ள குறைபாடு நீக்கி நல்லது நடக்க ஒரு வாய்ப்பை தான் உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன். நம்மால் நவஅம்மன் (சண்டி) பொதுயாகத்தை அவ்வப்பொழுது நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

நவஅம்மன் (சண்டி) யாகத்தில் தங்களின் பங்களிப்பை அளித்து உங்களின் பாக்கியஸ்தானத்தை வலுப்படுத்திக்கொள்ளுங்கள்.

சென்னையில் நாளை என்னை சந்திக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: