Followers

Wednesday, April 24, 2013

கன்னி: ஐந்தில் கேது


வணக்கம் நண்பர்களே !
                     கன்னி ராசிக்கு ஐந்தில் கேது நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

அடையாளம்?

மகர ராசி உத்திராடம் 2 3 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். இவர் சமஸ்கிருத மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு கிழக்கு பக்கமாக அமர்ந்திருக்கும்.

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

ஆட்களோடு நிறம் நல்ல வெள்ளை நிறமாக இருப்பார். இவர் தாய்மொழி எதுவோ அதனை மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் அமர்ந்திருக்கும்.

மகர ராசி அவிட்டம் 1 2 பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். இவர் தாய்மொழி மற்றும் தெலுங்கு மொழி பேசியிருப்பார்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

கேது படுத்த படுக்கையாகிவிடுவார். இவரால் பாதிக்கப்பட்டால் கோமாநிலைக்கு கொண்டு செல்லுவார். 

மகர ராசி உத்திராடம் 2 3 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

முகம் வயிறு போன்ற இடங்களில் தாக்கி அதனால் நோய்ப்பட்டு இறந்திருக்ககூடும்.

மகர ராசி அவிட்டம் 1, 2 பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

கையில் வெட்டுக்காயம் ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மகர ராசி உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

மகர ராசி அவிட்டம் 1, 2 பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம்

புதன்கிழமை தோறும் விநாயகரை வணங்கிவாருங்கள். கால் முறிந்த சந்நியாசிக்கு உதவுங்கள் சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் அடையாளம் காணமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: