Followers

Monday, April 22, 2013

கோடை விடுமுறை: குழந்தைகளின் ஆன்மீக பயிற்சி



வணக்கம் நண்பர்களே!
                     இப்பொழுது கோடை விடுமுறை துவங்கிவிட்டதால் உங்களின் குழந்தைகளுக்கு ஆன்மீகத்தில் உள்ள ஒரு சில நல்ல விசயங்களை கற்றுக்கொடுங்கள். 

கோடை விடுமுறையில் கம்பியூட்டர் வகுப்பு மற்றும் பிறமொழி கற்றுக்கொள்ளும் வகுப்பிற்க்கு அனுப்புவதை விட ஆன்மீகவகுப்பு மேலானது. கம்பியூட்டர் எல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இப்பொழுது உள்ள குழந்தைகள் அவர்களாகவே கற்றுக்கொண்டுவிடுவார்கள் ஆனால் ஆன்மீகம் என்பது அவர்களாகவே கற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதால் நீங்களே கற்றுக்கொடுத்துவிடுவது நல்லது.

நமது மதத்தில் உள்ள நல்ல கருத்துகளை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். அனைத்து மதத்திலும் கோடை விடுமுறையில் அவர்களின் மதங்களின் குரு தனியாக வகுப்பே எடுப்பார்கள். நமது மதத்தில் தான் ஆளே இதற்கு எல்லாம் கிடையாதே. நீங்களே குருவாக இருந்து அனைத்தையும் எளிதில் புரியும்படி சொல்லிக்கொடுங்கள். எளிதில் புரியும்படி என்றால் சின்ன சின்ன கதைகள் மூலம் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். 

பழமையான கோவிலுக்கு அழைத்து சென்று வணங்கிவிட்டு அந்த கோவில் உள்ள சக்தி கட்டக்கலை அனைத்தையும் விரிவாக சொல்லுங்கள். என்ன குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு சில நேரங்களில் நம்மால் பதில் அளிக்க முடியாது. பதில் அளிக்க முடியாத நேரத்தில் நீங்கள் பொய் சொல்லிவிடாதீர்கள். பதிலை தெரிந்துக்கொண்டு உனக்கு பதில் தருகிறேன் என்று சொல்லுங்கள்.

உங்கள் குழந்தைகளை மட்டும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்லாதீர்கள் உங்களின் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு செல்லுங்கள். எல்லா குழந்தைகளையும் சேர்த்துக்கொண்டு வகுப்பு போல் நடத்தலாம்.அந்த வகுப்பில் உள்ளவர்களுக்கு பரிசு பொருட்களையும் கொடுங்கள் அப்பொழுது அவர்களுக்கு உற்சாகமாக இருப்பார்கள்.

சிறிய வயதில் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் இந்த கருத்து அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மிக உயர்ந்த சொத்து. இந்த சொத்து எதிர்காலத்தில் அவர்கள் எப்பேர்பட்ட கஷ்டத்திலும் மீட்டுக்கொடுக்கும் மிகப்பெரிய கருவிபோல் இருக்கும்.

பத்து வயதுக்குள் ஆன்மீகத்தை உங்களின் குழந்தைகளுக்கு நீங்கள் ஊட்டிவிடவேண்டும். அப்பொழுது மட்டுமே அவர்களுக்கு எந்த வயதிலும் இந்த அனுபவம் மாறாது. அவர்களாகவே அனைத்தையும் புரிந்துக்கொள்வார்கள்.

என்ன நண்பர்களே செய்வீர்களா?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

dreamwave said...

நண்பரே நல்ல பதிவு .......காலத்திற்கு தேவை யான பதிவு!!!!

rajeshsubbu said...

//* dreamwave said...
நண்பரே நல்ல பதிவு .......காலத்திற்கு தேவை யான பதிவு!!! *//

வருக நண்பரே உங்களின் பகுதியில் இருப்பவர்களிடம் எடுத்துச்சொல்லுங்கள். நன்றி