Followers

Saturday, September 19, 2015

பாக்கியஸ்தானமும் களத்திரஸ்தானமும்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தைப்பற்றி பார்த்து வந்தோம். ஏழாவது வீடு நன்றாக இருந்து ஒரு நல்ல மனைவி அமைந்தாலும் பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கும்பட்சத்தில் தான் அந்த மனைவி நீண்ட காலம் வாழ்வார்.

ஒருவருக்கு ஏழாவது வீடு நன்றாக இருந்தது. ஏழாவது வீட்டிற்க்கு எந்த வித தீயகிரகங்களின் பார்வை இல்லாமல் நன்றாக இருந்தது ஆனால் அவரின் ஒன்பதாவது வீட்டிற்க்கு செவ்வாய் கிரகத்தின் பார்வை இருந்தது. 

அவருக்கு திருமணம் நடைபெற்று நல்லபடியாக வாழ்க்கை அமைந்தது. செவ்வாய் கிரகத்தின் தசா ஆரம்பித்த நாட்களில் இருந்து அவரரின் மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. கொஞ்ச நாளில் அவரின் மனைவி இறந்துவிட்டாள். 

திருமணம் முடிந்து மூன்று வருடங்களுக்குள் அவரின் மனைவி இறந்தார். அவருக்கு கொடுத்த பாக்கியம் அவ்வளவு தான். ஒருவர் திருமணம் நடைபெற்று அவரின மனைவி குறுகிய காலத்தில் இறந்தால் மிகுந்த துயரத்திற்க்கு ஆளாக நேரிட்டது. நாம் என்ன கிடைத்தாலும் கிடைக்கும் வாழ்க்கை நீண்ட நாளாக அது அமையவேண்டும். அதற்கு பாக்கியஸ்தானம் நன்றாக அமையவேண்டும்.

ஒரு சிலருக்கு நல்ல மனைவி அமையமாட்டாள் ஆனால் அவரின் பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கும். அப்படியே சண்டை சச்சரவு இருந்துக்கொண்டு இருந்தாலும் வாழ்க்கை அப்படியே ஓடிக்கொண்டிருக்கும். அதற்கும் பாக்கியஸ்தானம் தான் முக்கியம்.

திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். நாளை உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: