Followers

Sunday, January 1, 2017

சூரியன்


ணக்கம்!
          சூரியன் கிரகத்தை நாம் எடுத்துக்கொண்டு ஒரு விசயத்தை மட்டும் சொன்னாலே போதும் உங்களுக்கு சூரியனின் பலன் என்ன என்பது தெரிந்துவிடும். ஒரு நட்பு பெற்று அதன் வழியாக இன்று பெரியளவில் வந்துவிட்டவர்களை எல்லாம் உங்களுக்கு தெரியும்.

பெரிய அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிடைத்தாலே போதும் அவர்கள் வழியாக பெரியளவில் நாம் சென்றுவிடலாம். பெரிய அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு வைக்கவேண்டும் என்றால் உங்களின் ஜாதகத்தில் சூரியன் நல்ல பலத்தோடு அமையவேண்டும்.

ஒரு சிலர் இப்படிப்பட்ட பெரிய தொடர்பை ஏற்படுத்த அப்படி ஒரு போராட்டத்தை போடுவார்கள். எனக்கு தெரிய இடத்து தொடர்பு கிடைத்தால் போது சார் நான் அவர்களை வைத்தே பெரிய அளவில் வந்துவிடுவேன் ஆனால் கிடைக்க மாட்டேன்கிறது என்பார்கள்.

சூரியன் உங்களின் ஜாதகத்தில் சரியில்லாம் இருந்தால் உங்களுக்கு பெரிய இடத்து தொடர்பு கிடைக்காது. சூரியன் சனியின் வீட்டில் அமர்ந்தால் அல்லது ராகுவோடு இருந்தால் பெரிய இடத்து தொடர்பு கிடைக்க அலைவீர்கள் ஆனால் கிடைக்காது.

ராகுவோடு சூரியன் இணைவது நல்லதல்ல. ராகுவோடு சூரியன் இணையும்பொழுது நிறைய பிரச்சினையை சந்திக்க நேரிடும். அரசாங்கவழியிலும் தண்டனை பெறும் அமைப்பையும் ஏற்படுத்திவிடுவார்.

ஒரு சிலருக்கு சனியோடு சூரியன் இணைந்து பல வருடங்கள் ஜெயிலேயே இருக்கும்படியும் செய்துவிடுகின்றது. சனியோடு சூரியன் இணைந்து இரண்டு கிரகத்தில் ஒரு கிரகத்தின் தசா நடைபெறும்பொழுது இப்படிப்பட்ட தனிமையான வாழ்க்கையை வாழவைத்துவிடுகிறார்.

சூரிய தசா குறைவான கால தசா என்றாலும் கெடுதல் பலன் தரும் நிலையில் இருந்தால் கொஞ்சம் கவனத்தோடு எதிலும் செயல்படவேண்டும். சூரியனுக்குரிய பரிகாரத்தையும் செய்துக்கொண்டு வாருங்கள். சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Sir, Happy New Year... Intha pathivukum Tamilnatil ipothu nadakumo Arasiyalukum Yentha Samabanthamum illai endru Ninaikiren.....